110
வேர்ச்சொற் கட்டுரைகள்
பிள- பிளாச்சு = கிழித்த மூங்கிற் பட்டி.
பிளாச்சு- பிளாச்சி.
பிளாச்சு- பிளிச்சு = மூங்கிற் பட்டி (சீவக. 634, உரை). ஒ.நோ : MDu.splitten, G. spleissen, E. split.
பிள- பிளா = வாய் விரிந்த இறைகூடை (யாழ்ப்.).
பிளா
-
பிழா
=
1. வாய் விரிந்த ஓலைத்தட்டுக் குட்டான். “மலர்வாய்ப் பிழாவிற் புலர வாற்றி” (பெரும்பாண். 276). 2. இறை கூடை. “ஓங்குநீர்ப் பிழாவும்” (சிலப். 10 : 111).
பிழா-பிழார் = இறைகூடை (சூடா.).
பிழா- பிடா- பிடவு - பிடகு- பிடகம் - 1. வாய் விரிந்த பூந்தட்டு. 2. பூக்கூடை. 3. பூந்தட்டுப் போன்ற புத்தமறைப் பகுதி முப் (திரி) பிடகத்துள் ஒன்று. "பெரியோன் பிடக நெறி” (மணிமே. 26: 66). 4. நூல் (திவா.). 5. தட்டில் இடும் ஐயம் (பிச்சை) (சது.). 6. வெடிக்கும் கொப்புளம். “பெம்பிடகப் பிணியால் மேனி வெடிப்புண்டு" (திருக்காளத். பு. 17:31).
வ.பிடக(t).
பிடகம்- பிடகன் = திரிபிடக ஆசிரியனான புத்தன் (பிங்.).
பிடகு-பிடக்கு = புத்தர் பிடக நூல். “பிடக்கே யுரை செய்வார்" (தேவா. 245:10).
பிடகு - பிடகை = பூந்தட்டு. "பிடகைப் பெய்த கமழ்நறும் பூவினர்” (மதுரைக். 397).
வ.பிடகா (t).
பிள்- பெள் - பெட்டி = 1. அகன்ற வாயுள்ள பனைநார்க் கூடை. 2. அகன்ற வாயுள்ள மர அல்லது மாழைக் கலம். 3. வண்டி யோட்டுபவன் இருக்கைக்குக் கீழுள்ள பெட்டி போன்ற இடம். 4. வண்டியோட்டுபவன் இருக்கை. 5. பெட்டி போன்ற தொடர் வண்டிக் கூண்டின் அறை. 6. வழக்காளர் கூண்டு. 7. சுண்ணாம்பு அளக்கும் முகத்தலளவை.
பெட்டி-வ.பேட்டி.
பெட்டி- பெட்டகம் = 1. மரப்பெட்டி. ஆங்கிலங்கும் அளப்பரும் பெட்டகம்” (திருவாலவா. 27 : 22). 2. மணப் பெண்ணிற்கு வரிசை கொண்டு செல்லும் கட்டுப் பெட்டி (W.).