பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புல்® (துளைத்தற் கருத்துவேர்)

115

(சிறுபாண். 45). 7. பிறழ்தல். “நிலம்பெயரினும் நின்சொற் பெயரல்’” (புறம். 3). 8. மாறுதல் “ஆணெனத் தோன்றி யலியெனப் பெயர்ந்து” (திருவாச. 3:134). 9. தளர்தல். 10. கட்டுவிடுதல். 11. தேய்தல், சிதைத்தல். 12. அடியிடுதல். 13. போதல். 14. கூத்தாடுதல். 15. மீளுதல். “சூழ்ந்த நிரைபெயர” (பு. வெ. 1 : 10). 16. பணப்புழக்கமாதல். அந்தவூரில் எந்த நாளும் பணம் பெயரும் (உ. வ.). 17. பணத் தண்டலாதல். ஆயிரம் உருபா பெயர்ந்தது (உ.வ.).

பெயர்த்தல் = பெயரச் செய்தல்.

பெயர்- பேர். பேர்தல் = பெயர்தல். பேர்த்தல் = பெயர்த்தல்.

பொள்- பள்- பள்ளம் = 1. குழி. "பள்ள மீனிரை தேர்ந்துழலும்” (தேவா. 93 : 5). 2. கன்னத்தில் விழும் குழிவு. 3. ஆழம். “பள்ள வேலை பருகுபு"(இரகு. ஆற்று. 1). 4. தாழ்வு. "பள்ளம தரிய படர்சடை மேற்.... கங்கை” (தேவா. 427 : 1). 5. தாழ்நிலம்.

பள்ளம் - பள்ளன்

வகுப்பான்.

பள்ளன்- பள்ளமான மருதநிலத்தில் வாழும் உழவர்

பள்ளன் - பள் = 1. பள்ளர் வகுப்பு. 2. ஒருசார் பள்ளர் வாழ்க்கை பற்றிய ஒருவகை நாடகப் பனுவல் (அரு. நி.). 3. காளிக்குக் காவு கொடுக்குங் காலத்துப் பாடப்படும் பண்வகை.

பள்ளன் – மள்ளன் = மருதநிலத்தில் வாழும் உழவன். “மள்ள ருழுபக டுரப்புவார்” (கம்பரா. நாட. 18).

பள்ளன்- பள்ளி = 1. பள்ளர்குலப் பெண். 2. பள்ளன் மனைவி. 3. வன்னியர் குலம். 4. வன்னியர் குலச் சிற்றரசன். “ராஜாக்கள் போகப் பள்ளிகள் வந்து புகுருமா போலே" (திவ். இயற். திருவிருத்.40,வியா. 235).

பள்ளன்- பள்ளத்தி = பள்ளர்குலப் பெண்.

பள்ளத்தி- பள்ளச்சி = பள்ளர்குலப் பெண்.

பள்ளி- பள்ளிச்சி = வன்னியர்குலப் பெண்.

பள்- பள்ளு = பள்ளர் வாழ்க்கைபற்றிய நாடகப் பனுவல்.

பள்- பள்ளி = 1. படுக்கை. பள்ளிகொண்டான், பள்ளியெழுச்சி முரசம். 2. தூக்கம். "பள்ளிபுக் கதுபோலும் பரப்புநீர்த் தண்சேர்ப்ப" (கலித். 121). 3. விலங்கு துயிலிடம் (பிங்.). 4. படுக்கையறை.

குறிப்பு : துளைத்தல் என்பது, குழித்தல், குடைதல், தோண்டுதல், துளையிடுதல், துருவுதல் என்றும்; குத்துதல், வெட்டுதல், கிள்ளுதல், கீறுதல், சீவுதல், சிதைத்தல், அறுத்தல், கிழித்தல், பிளத்தல், உடைத்தல்,