பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புல் (துளைத்தற் கருத்துவேர்)

பொக்கு

பொக்கணம் 1.

=

சோழியப்பை.

129

"சுத்திய

பொக்கணத்து..... கோலத்தினீர்" (திருக்கோ. 242). 2. பெருமருந்து என்னும் மூலிகை (மலை.).

ம. பொக்கணம், தெ. பொக்கணமு (b), க. பொக்கண (b).

பொக்கு- பொக்கணி = 1. நெற்குத்தும் உரல். 2. விரிந்த தொப்புள். 3. குடிநீர்க் கலவகை (யாழ். அக.).

பொக்கணி- மொக்கணி = குதிரைக்குக் கொள் கோதுமை முதலிய உணவு கட்டும் பை.

க.பக்கண (b).

பொக்கு- பொக்கணை = 1.கல் மரம் முதலியவற்றிலுள்ள பொந்து. 2. நெற்குத்தும் உரல்.

பொகு-பகு.

கால்டுவெலார் தம் திரவிட ஒப்பியல் இலக்கணத்தின் இறுதிப் பகுதியில், 'சொல்லியல் உறவுகள்' (Glossarial Affinities) என்னும் தலைப்பின் கீழ்,

"bhaj, to share.

bhajga, a portion. I am doubtful whether to regard these words as derived from the Tamil pag-u, to divide, to share, or to suppose both the Sanskrit and the Tamil to be derived from a common and earlier source. Probably the former supposition is in this case the more correct. At all events the Tamil-Malayalam pag-u is a pase, underived Drvidian root. A noun former from it, signifying a share, is pang-u (ng for g, as is after the case); and a collateral root is pag-ir, meaning also to share. The Sanskrit word pangu means lame, and is altogether unconnected with the Tamil one. Other derived nouns are pagal, a division daylight; pal (=pagal), a portion; and padi (pagndi). half” - (Dravidian Comparative Grammar, p. 573). என்று கூறியிருத்தல் காண்க.

பகுதல் = (செ.கு. வி.) 1. பிளவுபடுதல். "சக்கரவாளச் சிலைபக” (திருப்பு. 841).2. பிரிவுபடுதல். “பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர்” (குறள். 187).

(செ. குன்றாவி.). பாகம் பிரித்தல் "பகுந்துனக்கு வைத்தகோ லறைக்கு’” (திருவாலவா. 30 : 50).

ம. பகுக, தெ . பகுலு (g).

பகுத்தல் = 1. பங்கிடுதல். "பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல்” (குறள். 322). 2. வகைப்படுத்துதல் (W.). 3. வகுத்துத் தெளிவாய்க் கூறுதல்