130
வேர்ச்சொற் கட்டுரைகள்
(W.). 4. வகுத்து கொடுத்தல் (பிங்.). 5. வெட்டுதல் (பிங்.). 6. பிடுங்குதல் “பாதவ மொன்று பகுத்தான்” (கம்பரா. இலங்கையெரி. 55). 7. பகுத்து நீக்குதல். “பண்ணுறு சுளைகள் கையாற் பகுத்துணக் கொடுத்த தன்றே” (சீவக. 2724).
பகு- வகு. வகுதல் = பிளத்தல். "மரல் வகுந்து கொடுத்த செம்பூங் கண்ணியொடு” (புறம். 264).
வகுத்தல் = 1. கூறுபடுத்துதல். 2. இனம்பற்றிப் பிரித்தல். 3. பகிர்ந்து கொடுத்தல். 4. வெவ்வேறு துறைகட்கு ஒதுக்குதல். "காத்த வகுத்தலும் வல்ல தரசு” (குறள். 385). 5. பெருந்தொகையைச் சிறுதொகையாற் பகுத்தல். 6. உயிர்கட்கு இன்பதுன்பக் கூறுகளை இறைவன் பிறப்பில் அமைத்தல். “வகுத்தான் வகுத்த வகை யல்லால்” (குறள். 377). 7. ஒன்றை வகைப்படுத்திச் சொல்லுதல். “அவன் கதை வகுப்பாய்” (பாகவத. 1, ஸ்ரீநாரதர். 5). 8. படைத்தல். “என்னை வகுத்திலையேல் இடும்பைக் கிடம்யாது சொல்லே" (தேவா. 643 : 2). 9. கட்டியமைத்தல். “பெரும்பெயர் மன்னர்க் கொப்பமனை வகுத்து” (நெடுநல். 78). 10. வழியமைத்தல்.
வகு- வகுந்து = வழி. “வகுந்துசெல் வருத்தத்து” (சிலப். 11 : 167). வகு- வகம் = வழி (யாழ். அக.).
வகு– வக்கு = வழி (யாழ். அக.).
வகு– வக்கு = வழி. அவனுக்குக் கடன் தீர்க்க வக்கில்லை.
வகு– வகை = 1. கூறுபாடு. “அவ்வகை யொன்பதும் வினையெஞ்சு கிளவி” (தொல். சொல். 146). வலம்புரி, இடம்புரி, சலஞ்சலம், பணிலம் எனச் சங்கு நால்வகைப்படும். 2. பொருட் பிரிவு. இது எவ் வகையைச் சேர்ந்தது? (உ.வ.). 3. குலப்பிரிவு. 4. முறை. கணக்குத் தப்பானாலும் வகைக்கு மதிப்பெண்கிடைக்கும் (உ.வ.). 4. ஆம்புடை (உபாயம்). இந்தத் தொல்லையினின்று தப்ப ஒரு வகை சொல் (உ.வ.). 5. மனையின் பகுப்பு. “வகைமா ணல்லில்” (புறம். 398). 6. உடலுறுப்பு. “வகைநல முடைய காளை” (சீவக. 695). 7. இடப்பிரிவு "மூதூரிடவகை யெல்லை யெல்லாம்” (சீவக. 462). 8. விளத்தம் (விவரம்). 9. தன்மை "வளமங்கையர் வகையுரைத்தன்று” (பு.வெ. 9 : 50, கொளு). 10. வலக்காரம் (தந்திரம்). “வகையால் மதியாது மண்கொண்டாய்” (திவ். இயற். நான்முகன். 25). 11. வலிமை. “வகைகொண்டு வந்தேன்" (கம்பரா. பாசப். 36). 12. வாழ்க்கைப் பொருள்கள் (W.).
ம. வக, தெ. வக (g), க., து.வகெ (g).