பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




134

வேர்ச்சொற் கட்டுரைகள்

சம்பளம் கொடுப்பார்க் கெல்லாம், படியளப்பார் என்னும் பெயர் உண்டாயிற்று. எல்லாவுயிர்கட்கும் உணவைப் பகுத்தளிப் பவன் என்னுங் கருத்தில் இறைவனும் படியளப்பான் எனப்பட்டான். "நமக்குப் படியளப்பார் நாரியோர் பாகர்” (தனிப்பா. 1, 121 : 5).

எல்லாம்வல்ல ஒரு தனி இறைவனுக்குரிய பகவன் என்னும் பெயர், சிறுதெய்வங்கட்கும் சிறந்த மக்கட்கும் நாளடைவில் வழங்கத் தலைப்பட்டுவிட்டதனால், திருவள்ளுவர் தம் திருக்குறட் கடவுள் வாழ்த்தில், முழுமுதற்கடவுளைக் குறிக்க ஆதிபகவன் என்று அடை கொடுத்துக் கூற வேண்டியதாயிற்று. ஆதி என்பது முதல் என்று பொருள்படும் வடநாட்டுச் சொல். அது முந்து திரவிடமாகிய பிராகிருதச் சொல்லாயிருக்கலாம். ஆதிபகவன் என்றது, ஆதியென்னும் புலைச்சியை மணந்த ஒரு பிராமணனை எனின், ஆதி சங்கராச் சாரியார் என்பதும் ஆதியென்னும் புலைச்சியை மணந்த சங்கராச்சாரி யாரை என்று கூறல் வேண்டும். அது பொருளன்மை அறிக.

கார்காலம், முரசுகட்டில், கோவூர்கிழார் என்பன போல, ஆதிபகவன் என்பதும் வலிமிகாது வழங்கிய ஒருசில புணர்ச் சொற்களுள் ஒன்றாகும். அதனால், ஆதி யென்பது வடசொல் (சமற்கிருதச் சொல்) என்று கொள்ள வேண்டுவதில்லை. மேலை யாரிய மொழிகளுள் ஒன்றிலும் ஆதி என்னுஞ் சொல்லின்மையின், அது வடசொல்லாகாது.

வழக்கற்றுப் போன கீழையாரியமும் பிராகிருதமுங் கலந்ததே வேதமொழி என்றும், வேதமொழியுந் தமிழுங் கலந்ததே சமற்கிருதம் என்றும், அவ் விரண்டுந் தேவமொழி யென்னும் ஏமாற்று இக் காலத்துச் செல்லாதென்றும், தமிழர் உண்மை அறிந்து தெளிக.

பகவன்- வ. பகவான் (bhagavan).

6

ரு

பகு- பகல் = 1. பகுக்கை (பிங்.). “நெருநைப் பகலிடங் கண்ணி” (புறம்.249)2(ஒரு பொருள் இரு சமப்பாகமாகப் பகும்) நடு (திவா.). 3 நடுவுநிலைமை. “அகல்வையத்துப் பகலாற்றி" (பதிற். 90 : 9). 4. நடு நுகத்தாணி. “நெடுநுகத்துப் பகல்போல” (பட்டினப். 206). 5. இருநாழிகை கொண்ட முழுத்தம் (முகூர்த்தம்). “ஒரு பகல்காறு நின்றான்” (சீவக. 2200). 6. நண்பகல், உச்சிவேளை. 7. நள்ளிருள். "யாமத்தும் பகலுந் துஞ்சார்’” (சிலப். 81). 8. காலை முதல் மாலை வரையுள்ள காலம். 'பகல் விளங்குதியாற் பல்கதிர் விரித்தே" (புறம். 8) 9. அறுபது நாழிகை கொண்ட நாள்."ஒல்வ கொடாது தொழிந்த பகலும்” (நாலடி. 169). 10. கதிரவன். “பன்மலர்ப் பூம்பொழிற் பகன்முளைத் ததுபோல்” (மணிமே. 4: 92). 11. ஒளி விளக்கம் (திவா.).