பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




140

வேர்ச்சொற் கட்டுரைகள்

இங்ஙனம் இருவேறு வகையில் வடமொழியில் எழுதப் படுவதால், பத்தி என்பது இருவேறு சொல்லோ என்று ஐயுறற்க. பக்தி என்னும் சொல்லிற்கும் பாகம் என்னும் சொல்லிற்கும் வடமொழி யாளர் பஜ் (bhaj) என்னும் ஒரே மூலங்காட்டுவதையும், பகு என்னும் முதனிலையினின்றே திரிந்துள்ள பக்கம் என்னும் சொல்லை அவர் பக்ஷ என்று திரிப்பதையும், நோக்குக.

இங்ஙனம், ஒரே முதனிலையினின்று திரிந்துள்ள பல்வேறு திரி சொற்களை, எழுத்துமாற்றி வெவ்வேறு மூலத்தினின்று திரிந்த சொற்களாகக் காட்டுவது, வடமொழியாளர் வழக்கம்.

முத்தம் என்னும் தென்சொல்லை முக்த என்று திரித்தது போன்றே, பத்தி என்ற தென்சொல்லையும் பக்தி என்று திரித்துள்ளனர்

வடமொழியாளர்.

பத்தி– பந்தி = மக்கள் உண்டற்கு அமரும் வரிசை அல்லது வரிசைத் தொகுதி. "பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து” (பழ.). 2. விலங்குகளை நிறுத்தும் ஒழுங்கு. "பண்ணமை வயப்பரிகள் பந்தியி னிரைத்தார்” (கம்பரா. வரைக்காட்சி. 13). 3. குதிரைச் சாலை. "இவுளிகள் கண்ணு பந்தியிற் கட்டத் தகுமென (திருவாலவா. 27 : 16). ஒ. நோ : கொத்து - கொந்து.

பந்தி - பிரா. பந்த்தி - வ. பங்க்தி.

வடமொழியாளர் பங்க்தி என்னும் சொற்குக் காட்டும் வரலாறு

வருமாறு:

பஞ்சன் (பஞ்சம்) = ஐந்து, ஐந்து விரல் போன்ற அல்லது ஐந்து பொருள் கொண்ட வரிசை. பகுத்தறிவுள்ளவர் இதன் புரைமையைக் கண்டுகொள்க.

பாத்து - பாது = பங்கு. "யார்க்கும் பாதிடு முரவோர்போல்” (கோயிற்பு. பதஞ். 82).

பாது- பாதிடு. பாதிடுதல் = 1. பங்கிடுதல். 2. வெட்சி மறவர் பகைவர் நாட்டிலிருந்து கவர்ந்த ஆநிரையைத் தமக்குள் பங்கிட்டுக் காத்தல். 3. பாதுகாத்தல் (W.).

பாதிடு- பாதீடு = 1. பங்கிடுகை (யாழ். அக.). 2. வெட்சி மறவர் பகைவர்நாட்டினின்று கவர்ந்த ஆநிரையைத் தம்முட் பகிர்ந்து காத்தலைக் கூறும் புறத்துறை.

"வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின் ஆதந் தோம்பல் மேவற் றாகும்'

(தொல். புறத். 2)