பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புல் (துளைத்தற் கருத்துவேர்)

படுக்கையறை = பள்ளியறை.

படுக்கையிற் போடுதல்

=

145

நெட்டுக்குத்தாக நிற்பதைப்

படுகிடையில் அல்லது நீளவாட்டில் வைத்தல்.

படுக்கைப் பற்று = 1. சீர் வரிசை (சீதனம்). “தன் ராஜ்யத்தை அவர்களுக்குப் படுக்கைப் பற்றாக்கி” (ஈடு, 4 : 1 : 5). 2. உவளகம் (அந்தப்புரம்). "நாங்கள் படுக்கைப் பற்றில் உள்ளோம்” (ஈடு,4:8:1).

படுக்கை மரம்

=

தோணியிற் பண்டங்களை வைக்குமாறு

அமைக்கும் பலகை (W.).

படுகட்டை = 1. உலர்ந்த மரத்துண்டு (W.). 2. பயனற்ற கிழவன் அல்லது கிழவி.

படுகண் = படுகண்ணி. படுகண்ணும் கொக்குவாயும் உட்பட நிறை (S.I.I. II, 157).

படுகண் - படுகண்ணி = அணிகலத்திற் கொக்குவாய் மாட்டப்படும் உறுப்பு. "கொக்குவாயும் படுகண்ணியும் போலே” (திவ். பெரியதி. 5: 4 : 7. வியா.).

படு - படுகர் = 1. பள்ளம் (திவா.). 'தான்விழும் படுகர் வீழ்த்தான்' (குற்றா. தல. புட்பகந்த. 16). 2. நீர்நிலை (பிங்.). `தத்துநீர்ப் படுகர்" (திருவிசைப். கருவூர். 8 : 9). 3. வயல் (W.). 5. மருதநிலம், “பூம்படுகர்ப் பகட்டினங்கள்” (காஞ்சிப்பு. திருநாட்டு. 131). 6. ஏற்றிறக்கமான வழி. "ஆரிப் படுகர்ச் சிலம்பு” (மலைபடு. 161).

படுகல் = நீர்நிலை. 'பூம்படுகல் லிளவாளை பாயும்" (தேவா. 82: 2).

படுகளம் = புண்பட்டு விழும் அல்லது இறக்கும் போர்க்களம். "உலக மேத்தும் படுகளங் கண்டு” (சீவக. 17).

படுகாடு = 1. மரங்கள் ஒருசேர விழுந்த காடு (திவ். திருப்பா. 6: 95, வியா.). 2. சுடுகாடு. “படுகாட்டகத் தென்றுபோர் பற்றொழியீர்” (தேவா. 879:6).

படுகாடு கிடத்தல் = ஒருசேர விழுந்த மரங்கள் போலச் செயலற்றுக் கிடத்தல். “பறவையின் கணங்கள்..... படுகாடு கிடப்ப” (திவ். பெரியாழ். 3:6:8).

=

படுகிடை = 1. நோய் மிகுதியால் எழமுடியாமற் படுக்கையிற் கிடத்தல். 2. தன் எண்ணம் நிறைவேற ஒட்டாரமாய்ப் படுத்துக் கிடக்கை.