148
வேர்ச்சொற் கட்டுரைகள்
பாடோடிக் கிடத்தல் 1. பாடு கிடத்தல். 2. துயரத்தினாற் படுகிடையாய்க் கிடத்தல். “நான் பாடோடிக் கிடந்தேன்” (ஈடு, 6:8:4).
பது – பாது – பாந்து. பாந்துதல் = பதுங்குதல் (சூடா.). “ஆந்தை பாந்தி யிருப்ப” (கலிங். 127, புதுப்.).
பாந்து-பாந்தல் = பதுங்குகை (சூடா.).
பாந்தல்
—
பாந்தள்
=
1. (புல்லுள்ளும் செடிகளுள்ளும்
பதுங்கியிருக்கும்) பாம்பு. "பாந்தளஞ் சடில முக்கட் பாவலன்' (திருவாலவா. 16 : 32). 2. மலைப்பாம்பு. 'கானிடைப் பாந்தள் கண்படுப்பன’ (சீவக. 1900).
பாந்து என்னும் சொல்லிற்குப் பொந்து என்னும் பொருளுமுண்டு. மலைப்பாம்பு பொந்திற்குள் இராமையின், பதுங்குதற் பொருளே பொருத்தமானதாகக் கொள்ளப்பட்டது.
புல்- புள்- பொள்- பள்- பள்ளம்.
இக் காலத்தை நோக்க முற்காலம் பள்ளம் போன்றிருத்தலால், பள்ளக் கருத்தினின்று பழமைக் கருத்துத் தோன்றிற்று.
ஒ. நோ : கில்லுதல் = தோண்டுதல். கில் - கீள்- கீழ் = 1. பள்ளம் (சூடா.). 2. கீழிடம். “நள்ளுதல் கீழுளு மேலுளும் யாவுளும்” (திருவாச. 5:46). 3. முற்காலம். “கீழ்ச்செய் தவத்தாற் கிழியீடு நேர்பட்டு” (திருவாச. 40:9).கீழ் - கிழம் = முதுமை, முதியது.
-
தொல்லுதல் = துளைத்தல், தோண்டுதல். தொல் தொள். தொள்ளுதல் - தொளைத்தல், தோண்டுதல். தொல் = பழைய. தொல் - தொல்லை = பழமை. தொல் - தொன்று = பழமை. தொன்றுதொட்டு = பழைய காலந்தொடங்கி. தொல்- தொன்மை = பழமை, பழைமை. தொள் தொண்டு பழமை (திவா.) “தொண்டு போலவெவ் வுலகமுந் தோன்றுதல் வேண்டும்” (விநாயகபு. 82 : 55).
=
பள்- பண்டு = 1. பழமை. “பண்டாய நான்மறையும்” (திருவாச. 48: 1) . 2. முன்பு. "பண்டறியேன் கூற்றென் பதனை” (குறள். 1083).
ம., தெ. பண்டு. பண்டு பண்டை =
―
=
(பெ.). 1. பழமை.
“பண்டைப் பிறவிய ராகுவர்” (மணிமே. 11 : 33). 2. முற்காலம். தண்டமுந் தணிதிநீ பண்டையிற் பெரிதே” (புறம். 10).
(கு.பெ.எ.). = பண்டைக் காலம்.