பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புல்® (துளைத்தற் கருத்துவேர்)

151

உண்டு பயிலுதல். “பழகப் பழகப் பாலும் புளிக்கும்” (பழ.). 6. ஒரு வினையைப் பலநாட் செய்து தேர்ச்சி பெறுதல். ஐந்தாண்டு வீணை பழகி வருகின்றான். ஆங்கிலம் பேசிப் பழகிக் கொண்டான் (உ.வ.). 7. ஒரு வினையை வழக்கமாகச் செய்தல். கல்லூரிக்குச் சென்ற பின் சுருட்டுக் குடிக்கப் பழகிவிட்டான் (உ.வ.). 8. ஒத்துப்போதல். குற்றாலஞ் சென்றபின் குளிர்ந்த நீர்க்குளிப்பிற்கு என் உடம்பு பழகிவிட்டது (உ.வ.) பழகு- பழக்கம் = 1. பயிற்சி.

“சித்திரமுங் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம்

நடையும் நடைப்பழக்கம்”

(தனிப்பா.)

2. வழக்கம். “பழக்கங் கொடியது, பாறையினுங் கோழி கீறும்” (பழ.3). அறிமுகம். அவர் எனக்கு நல்ல பழக்கம் (உ.வ.). 4. ஒழுக்க வினை. அவனிடத்திற் சில கெட்ட பழக்கங்கள் இருக்கின்றன (உ.வ.). 5. வினைத் தேர்ச்சி, திறமை, சமர்த்து (W.). 6. அடங்கிப் போகை. 7. வயக்குதல், பயிற்றல். விலங்குகள் போருக்கும் வட்டக் காட்சிக்கும் (circus) பல்லாண்டு பழக்கம் பெறல் வேண்டும் (உ.வ.).

பழகாளி- பழகாடி = பட்டறிவுள்ளவன் (யாழ்ப்.).

பழகு - பழக்கு. பழக்குதல் = பழகச் செய்தல், பயிற்றுதல், வயக்குதல்.

க.பழகிசு.

பழகு - பழங்கு. பழங்குதல் = 1. பழகுதல். 2. உறவாடுதல். 3. கையாளுதல். வீட்டிற் பழங்குவதற்கு வேண்டிய கலங்கள் இல்லை (2.01.).

பழங்கு-புழங்கு. புழங்குதல் = 1. பழகுதல். 2. கையாளுதல். "விதர்ப்ப தேயத்திற் புழங்கலுறும் பொருண் முழுதும் பொலிந்து ” (விநாயகபு. 55:4). புழங்கலுக்குரிய கலம் ஒன்றும் மருமகள் கொண்டு வரவில்லை (உ.வ.).

பழக்கம் - புழக்கம் = 1. பழக்கம். 2. அறிமுகம்.

புழங்கு-புழக்கம் = 1. கையாட்சி, புழக்கத்திற்குக் கலங்களில்லை. 2. பண நடமாட்டம். இவ் வாண்டு பணப்புழக்கம் மிகக் குறைந்துவிட்டது (உ.வ.).

பழங்கு-வழங்கு. வழங்குதல் = (செ. கு. வி.) 1. தொன்றுதொட்டு நடைபெற்று வருதல். “வழங்கியல் மருங்கின் மருவொடு திரிநவும்”