பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புல்® (துளைத்தற் கருத்துவேர்)

6

155

பழங்கண் = 1. துன்பம். “பகைவ ராரப் பழங்கண் ணருளி” (பதிற். 37:3). 2. மெலிவு (பிங்.). முதுமையில் துன்பமும் மெலிவும் நேர்வது இயல்பே.

ஒருவரைப் பழிப்பது தாழ்வுபடுத்துதலாதலால், தாழ் மட்டத்தைக் குறிக்கும் பள்ளக் கருத்தினின்று பழிப்பு அல்லது இழிப்புக் கருத்துந் தோன்றும்.

பள்- பழி. பழித்தல் = 1. இகழ்ந்து அல்லது இழித்துக் கூறுதல். 2. கடிந்து கூறுதல். “உலகம் பழித்த தொழித்து விடின்” (குறள். 290). 3. புறங்கூறுதல். 4. நகையாடுதல்.

பழித்துக்

காட்டுதல்

=

ஒருவரது உறுப்பை அல்லது

செயலைப்போல் நடித்து நகையாடுதல்.

க.பழி.

பழி = 1. இகழ்ச்சி. "புகழிற் பழியி னென்றா” (தொல். சொல். 73). 2. அலர். "ஒன்றார் கூறும் உறுபழி நாணி” (பு. வெ. 11, பெண்பாற். 4). 3. குறை(W.). 4. குற்றம். "மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்து” (பட்டினப். 216). 5. தீவினை (பாவம்). “தசமாமுகன் பூவியலும் முடிபொன்று வித்த பழிபோயற" (தேவா. 890:2). 6. தீவினைப் பயன். அவனைக் கொலைப்பழி விடாது (உ.வ.). 7. தீங்கிற்குத் தீங்கு செய்வு. 8. கொலை. வெட்டுப்பழி குத்துப்பழி (உ.வ.). 9. பகை. இருவகுப்பார்க்கும் பழிமூண்டுவிட்டது (உ.வ.). க.பழி.

பழிகரப் பங்கதம் வசையை வெளிப்படையாகக் கூறாது, குறிப்பாக அல்லது மறைத்துக் கூறும் செய்யுள். "மொழிகரந்து சொல்லினது பழிகரப் பாகும் ” (தொல். செய். 125).

பழிகாரன் = 1. பிறர்மேற் குறைகூறுபவன் (W.). 2. கொலை காரன்.

பழி சுமத்தல் = 1. கரணியமின்றிக் குற்றவாளிப் பெயர் தாங்கல். “தேரையர் தெங்கிளநீ ருண்ணாப் பழிசுமப்பர்” (தமிழ்நா. 74). 2. தன் வினையால் அல்லது பிறர் வினையால் குற்றந் தாங்குதல்.

பழி சுமத்துதல் = குற்றஞ் செய்யாதவனைக் குற்றவாளி யெனல்.

பழிதீர்த்தல் = 1. கொலைக்குக் கொலை செய்தல். 2. தீவினையைப் போக்குதல். “இந்திரன் பழிதீர்த்த படலம்” (திருவிளை.).