158
வேர்ச்சொற் கட்டுரைகள்
ஒ.நோ : த.பழம் - வ. பல- த. பலன். E. fruit = result.
-
கு
பயம் – பயன் = 1. விளைவு. “வேள்விப் பயன்” (குறள். 87). 2. பழம். “பயனாகு நல்லாண் பனைக்கு” (சிவப். பிரபந். நால்வர். 17). 3. சாறு. “வம்பார் கொழுங்கனிச் செழும்பயன் கொண்டு " (தேவா. 460 : 3). 4. சொற்பொருள். "சொற்குப் பயன்றேர்ந்துவா” (குமர. பிர. மதுரைக். 53). 5. செல்வம். “பயன்றூக்கி” (குறள். 912).
பயம் பய. பயத்தல் = (செ. கு. வி.) 1. விளைதல் “பயவாக் களரனையர்கல்லாதவர்” (குறள். 406). 2. உண்டாதல் (திவா.). 3. நிகழ்தல். "நல்வினை பயந்த தென்னா" (கம்பரா. கார்முக. 36). 4. கிடைத்தல் (LIT.).
(செ. குன்றாவி.) 1. கொடுத்தல். "இன்னருள் பயந்து ” (தேவா. 775 : 4). 2. படைத்தல். "தேவதேவன் செழும் பொழில்கள் பயந்து காத்தழிக்கும்” (திருவாச. 5: 30). 3. பெறுதல். “பராவரும் புதல்வரைப் பயக்க” (கம்பரா. மந்தரை. 47). 4. பூத்தல். “தாமரை பயந்த வொண்கேழ் நூற்றித ழலரின்” (புறம். 27). 5. இயற்றுதல். “சிங்கடி தந்தை பயந்த....... தமிழ்” (தேவா. 201 : 12).
பய - பயப்பு = 1. பயன். "பயப்பே பயனாம்.” (தொல். உரி.9).2. அருள் (W.).
பள்- பண்டு = பழம். தெ., க. பண்.
பண்டு (பழம்) என்னும் சொல் இற்றைத் தமிழில் வழங்காவிடினும், குமரிநாட்டுத் தமிழில் வழங்கியிருத்தல் வேண்டும். பள் என்னும் மூலத்தினின்று பண்டு என்னும் சொல்லே முதலில் தோன்றியிருக்கும். ழகர வுயிர்மெய் ணகர வுயிர்மெய்யாகத் திரியினும் ழகரமெய் தனிக்குறிலடுத்து வழங்காமையின் பிறவெழுத்தாய்த் திரிவதில்லை. பழமை, பழி என்னும் சொற்கள் பண்டு என்னும் வடிவுங் கொண்டு வழங்குவது போன்றே, பழம் என்னும் சொல்லும் அவ் வடிவுகொண்டு வழங்கியிருத்தல் இயல்பே.
குமரிநாட்டு இலக்கியமனைத்தும் அழிக்கப்பட்டு விட்டமையால், பல சொற்கட்கும் சொல்வடிவுகட்கும் மேற்கோள் எடுத்துக்காட்ட இயலவில்லை.
குமரிநாட்டுச் சொற்கள் சில இற்றைத் தமிழில் வழங்காது ஏனைத் திரவிட மொழிகளில் வழங்குவதனால், அவை தமிழிற்குரிய வல்ல என மயங்கற்க.