பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நுல்' (நீட்சிக் கருத்துவேர்)

=

45

நில் - நில- நிலவு. நிலவுதல் = 1. நிலைத்திருத்தல். "யாரு நிலவார் நிலமிசை மேல்” (நாலடி. 22). 2. தங்குதல். "இறுதியு மிடையும்... நிலவுதல்" (தொல். வேற். மயங். 20). 3. வழங்குதல். “நிலவு மரபினை யுடையது”(W.).

6

6

நில் - நிலை = 1. நிற்கை. “பணைநிலை முனைஇ” (புறம். 23). 2. உறுதி. “நீக்கமு நிலையும்” (திருவாச. 3:9). 3. நிலைமை. “நன்னிலைக்கட் டன்னை நிறுப்பானும்” (நாலடி. 248). 4. தன்மை. “திருந்துநிலை யாரத்து ” (பெரும்பாண். 46). 5. தங்குமிடம். “நெடுந்தேர் நிலைபுகுக” (பு.வெ. 6: 2). 6. இடம். "நின்னிலைத் தோன்றும்” (பரிபா. 2 : 27). 7. கதவுநிலை. ‘"ஐயவி யப்பிய நெய்யணி நெடுநிலை” (நெடுநல். 86). 8. மாடியடுக்கு. “எழுநிலை மாடங் கால்சாய்ந் துக்க” (நறுந். 54). 9. மரபுவழி யுரிமை. “தன்பாட்டன் நிலையாய் வருகிற காணி” (S.I.I.II, 310). 10. வில்மறவன் நிற்கும் வகை (மடக்கு, மண்டலம், முன்வலம், பின்வலம்). 11. ஓராள் நிற்கக் கூடிய நீராழம். “நீர்நிலை காட்டுங் காலத்து” (பெரும்பாண். 273). 12. ஒழுக்க நெறி. "நிலையிற்றிரியாதடங்கியான்றோற்றம் ” (குறள். 124). 13. வாழ்க்கை நிலை. “பிரமசரிய முதலிய நிலைகளினின்று” (குறள். பரிமே. உரைப்பா.). 14. குலம். 'காணிகைக் கொண்ட மறுநிலை மைந்தனை” (கல்லா. 45 : 20). 15. நிலைத்த தொழில். 16. ஒட்டாரம். 17. அமையம். 18. வளர்ச்சிப் படி (stage).

ம. நில, க. நெலெ, தெ. நெலவு.

நிலை - நிலையம் = 1. தங்குமிடம். 2. உறைவிடம். “நியாயமத் தனைக்குமோர் நிலைய மாயினான்” (கம்பரா. கிளை. 55). 3. கோயில். "நல்லூ ரகத்தே திண்ணிலையங் கொண்டு நின்றான்” (தேவா. 414 : 5). 4. தொடர்வண்டி நிற்குமிடம்.

வடமொழியாளர் திருட்டுத்தனமாகவும் ஏமாற்றுத்தன மாகவும் நிலையம் என்னும் தென்சொல்லை நி + லயம் என்று பகுத்து, ஓரிடத்தொடு ஒன்றிப் போதல் என்று பொருள் கூறி, வடசொல்லாகக் காட்டுவர். அம் முறையையே பின்பற்றிச் சென்னைப் ப. க. க. த. அகரமுதலியும் நிலயம் என்னும் தவற்று வடிவையே மேற்கொண்டுள்ளது.

.

நிலைதல் = நிற்றல். 'உம்மை நிலையு மிறுதி யான" (தொல். உருபியல், 7).

நிலைத்தல்

=

1. நிற்றல். 2. உறுதிப்படுதல். 3. நீடித்தல். 4.மாறாதிருத்தல். 5. என்று மிருத்தல். 6. நீர்மட்டம் ஆளள விருத்தல். “தண்ணீர் ஆளுக்கு நிலைக்குமா?” (உ.வ.).