பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நுல்' (நீட்சிக் கருத்துவேர்)

47

நித்தம் = 1. என்றும் (கு.வி.எ.). “நித்த மணாளர் நிரம்ப வழகியர்” (திருவாச. 17:3). 2. என்றுமுள்ள நிலை (பெ.). "நேரி னித்தமு மொட்டின னாகுமே” (மேருமந். 652).

-

நித்தமணாளர் என்பது குறிப்புப் பெயரெச்சத் தொடருமாம். நித்தம் - நித்த. ஒ.நோ : பித்தம்- பித்த.

நித்த = என்றுமுள்ள.

நித்தம்-வ. நித்ய.

நித்தக்கட்டளை, நித்தக்கத்தரி, நித்தக்கருமம், நித்தக்காய்ச்சல், நித்தப்படிகாரன் என்பன தூய தென்சொற்றொடர்களே.

நிச்சல்- நித்தல்

=

எப்போதும், எந்நாளும். "நித்தல் பழி

தூற்றப்பட்டிருந்தது" (இறை. கள. 1: 14).

நித்தல் விழா = நாள்தொறும் நிகழும் விழா. “நித்தல் விழாவணி நிகழ்வித் தோனே” (சிலப். உரைபெறுகட். 4).

நித்தலழிவு=நாட்படிச்செலவு. (S.I.I.III, 298).

நிச்சலும்

நித்தலும்

எந்நாளும். 'உமை நித்தலுங்

கைதொழுவேன்” (தேவா. 825). உம்மை முற்றும்மை.

நித்தம்- நித்தன் = 1. கடவுள். 2. சிவபிரான் (பிங்.). 3. அருகன் (பிங்.). ஒ.நோ: பித்தம்- பித்தன்.

நிற்றம், நிச்சம், நித்தம் என்னும் மூவடிவுகளுட் கடைப்பட்ட நித்தம் என்னும் வடிவினின்று, நித்ய என்னும் வடசொல்லைத் திரித்துக்கொண்டு, அதையே முத்தென்சொல் வடிவிற்கும் மூலமாகக் கூறி ஏமாற்றி வருகின்றனர் வடமொழியாளர். இதற்கு ஏதுவானது, ஏமாறுந்தன்மை மிக்க தமிழரின் பேதைமையே.

என்று முண்மைக் கருத்தைத் தோற்றுவித்தற்கு நிலைப்புக் கருத்தே பொருத்தமானது. வடமொழியாளர் கீழ், பின், உள் என்று பொருள்படும் ‘நி’ என்னும் முன்னொட்டை மூலமாகக் கொண்டு, ஒன்றன் உட்பட்டது, ஒன்றோடு தொடர்புள்ளது, தொடர்ந்தது, நீடித்தது, நிலைத்தது என்று கருத்துத் தொகுத்து, நித்ய என்னும் சொற்குப் பொருட்கரணியங் காட்டுவர். இதன் பொருந்தாமையை இனிமேலாயினுங் கண்டு தெளிக.

பிராமணன் நிலத்தேவன், சமற்கிருதம் தேவமொழி என்னும் மூடநம்பிக்கையையே அடியோடு விட்டொழிக.