பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நுல் (நீட்சிக் கருத்துவேர்)

நிறுவனம் (Founder).

49

நிறுவனர் = ஓர் அமைப்பைத் தோற்றுவித்தவர்

3.நடத்தல்

நெடு - நெட -நடநடத்தல் = 1. நிற்கும் இடத்தைவிட்டு நீளுதல்போற் காலடி வைத்துச் செல்லுதல். "காளைபின் நாளை நடக்கவும் வல்லையோ” (நாலடி. 398). 2. பரவுதல். “குரையழல் நடப்ப” (பு. வெ. 1 8 8). 3. ஒழுகுதல். வேலைக்காரன் வீட்டுத் தலைவனிடம் பணிவாய் நடந்துகொள்ள வேண்டும் (உ.வ.). 4. நிகழ்தல். திருவிழா என்றைக்கு நடக்கும்? (உ.வ.). 5. நிறைவேறுதல். உன் வஞ்சினம் (சபதம்) நடக்கவில்லை (உ.வ.). அது நடக்கிற கருமமா? (உ.வ.). 6. நிகழ்ந்து வருதல். எழுத்தாளர் அதிகாரம்தான் இன்று நடக்கிறது (உ.வ.).

ம.நடக்க,க.நடெ, தெ.நடுச்சு, து. நடப்புனி.

நட - நடக்கை = 1. செல்கை. 2. வழக்கம். "ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பின்” (தொல். புறத். 36). 3. ஒழுக்கம். நன்னடக்கைத் தகுதித்தாள் வாங்கிக்கொண்டு வா (உ.வ.). 4. நிகழ்ச்சி.

ம. நட.

நட - நடத்தை = 1. ஒழுக்கம். அவன் நடத்தை சரியாயில்லை (உ.வ.). 2. இயல்பு.

ம. நடத்த, தெ. நடத்த, க. நடத்தெ.

நட - நடப்பு. 1. நடத்தை. 2. கருமம் நிகழ்ந்துவரும் முறை. நடப்பு எப்படி யிருக்கிறது? (உ.வ.). 3. இற்றை நிகழ்ச்சி. நடப்புச் செய்தி என்ன? (உ.வ.). 4. அவ்வப்போது நிகழ்வது. நடப்புக் கணக்கு (Current Acount). 5. அடுத்த ஆண்டு. நடப்பிற்குப் பார்த்துக் கொள்ளலாம் (உ.வ.). 6. அடுத்துவரும் சுறவ (தை) மாதம். “நடப்பிற்குக் கலியாணம், கழுத்தே சும்மாவிரு” (உ.வ.). 7. காமத் தொடுப்பு. 8. இறுதிச் சடங்கிற்கு முந்தின நாள் கல்நடுகை. 9. தாலி வாங்குகை (யாழ்ப்.). 10. குறிக்கோள். “ஊதியமாகிய நடப்பின் மேலே” (சீவக. 770, உரை). ம., து நடப்பு.

6

நட - நடவை = 1. வழி. கான்யாற்று நடவை (மலைபடு. 214). 2. கடவைமரம் (turnstile) (பிங்.). 3. வழங்குமிடம். “தலைமை வளர் தமிழ் நடவை யெல்லை” (சேதுபு. திருநாட். 1). 4. திட்டம். "நல்வரங்கொளு நடவையொன் றியம்புவேன்” (சேதுபு. மங்கல. 69).

தெ.நடவ,க.நடவெ.