பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6

நுல்® (பொருந்தற் கருத்துவேர்)

நுல் - நல் - நள்.

நள்ளுதல் = 1. சேர்தல் “உயர்ந்தோர் தமைநள்ளி” (திருவானைக். கோச்செங்.25).2. செறிதல். 'நள்ளிருள் யாமத்து” (சிலப். 15 : 105). 3. நட்புச் செய்தல். “உறினட் டறினொரூஉம்” (குறள். 812). 4. விரும்புதல். “நள்ளா திந்த நானிலம்” (கம்பரா. கைகேசி. 26).

நள்ளி = உறவு (சூடா.).

நள்(ளு) = மருங்கு (யாழ். அக.).

=

நள்ளுநர் = நண்பர் (திவா.). நள்ளார் = பகைவர். "நள்ளார் பெரும்படை” (கம்பரா. அதிகாயன். 219).

நள் - நளி .நளிதல் = 1. ஒத்தல். "நாட நளிய நடுங்க நந்த ” (தொல். உவம. 11). 2. செறிதல். “நளிந்துபலர் வழங்காச் செப்பந் துணியின்” (மலைபடு. 197). 3. பரத்தல். “நளிந்த கடலுள் திமிறிரை போல்” (களவழி. 18).

நளி - நளிய ஓர் உவமவுருபு (தொல். 1232).

நளிவு = 1. செறிவு. “நளியென்கிளவி செறிவு மாகும்” (தொல். உரி. 25). 2. கூட்டம் (பிங்.). 3. பெருமை. “தடவுங் கயவும் நளியும் பெருமை” (தொல். உரி. 22). 4. அகலம். “நளிகடற் றண்சேர்ப்ப” (நாலடி. 166). 5. செருக்கு. "விந்தகிரி நளிநீக் கென்றான்” (சேதுபு. அகத். 3). 6. குறிப்பு. 7. பழிப்பு. 8. நகையாட்டு. அவன் எப்போதும் நளி பேசிக்கொண்டிருப்பான் (நாஞ்.வ.).

நளி - நளம் = அகலம் (சது.).

-

நள் - நட்பு = 1. நேயம். “அகநக நட்பது நட்பு” (குறள். 786). 2. காதல். 'நின்னொடு மேய மடந்தை நட்பே” (ஐங். 297). 3. உறவு (பிங்.). 4. நண்பன். 5. சுற்றம் (சூடா.).