பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நுல் (பொருந்தற் கருத்துவேர்)

=

53

நள் - நண். நண்ணுதல் = 1. கிட்டுதல். “நம்பனையுந் தேவனென்று நண்ணுமது” (திருவாச. 12 : 17). 2. பொருந்துதல்.

நண்ணுநர் = நட்பினர் (பிங்.).

நண்ணார் = பகைவர். "நண்ணாரு முட்குமென் பீடு” (குறள். 1088). ம.நண்ணார்.

நண்மை = அண்மை. "நட்பெதிர்ந் தோர்க்கே யங்கை நண்மையன்” (புறம். 380: 11).

நண்பு = நட்பு. “நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும் ” (குறள். 998). 2. அன்பு. "எம்மானே நண்பே யருளாய்” (திருவாச. 44 : 3). 3. உறவு (LIBI.).

ம. க. நண்பு, தெ. நனுப்பு.

9

நண் - நணி

=

அண்மையான இடம். "திரையொரு முந்நீர்க்

கரைநணிச் செலினும்” (புறம். 154).

நண் - நணுகு. நணுகுதல் = 1. கிட்டுதல். “நானணுகு மம்பொன் குலாத்தில்லை” (திருவாச. 40: 6). 2. ஒன்றிக் கலத்தல். “நம்புமென்சிந்தை நணுகும் வண்ணம்” (திருவாச. 40 : 6).

நணுகார் = பகைவர்.

=

=

நணுகு நணுங்கு. நணுங்குதல் நெருங்கிக் கலத்தல். “சுரும்பினங்கள்... நரம்பென வெங்கு நணுங்க” (ஏகாம். உலா. 276).

நளி - டி .ஒ . நோ : களிறு- கடிறு.

நடித்தல் = 1. ஒத்து நடத்தல். 2. கூத்தாடுதல். "நடிக்குமயி லென்னவரு நவ்விவிழி யாரும்” (கம்பரா. வரைக்காட்சி. 15), 3. வடிவெடுத்தல். “நடித்தெதிர் நடந்த தன்றே” (இரகு. ஆற்று. 20). 4. நாடகமாடுதல். 5. பாசாங்கு செய்தல். "நடித்து மண்ணிடைப் பொய்யினைப் பலசெய்து” (திருவாச. 41: 3).

நடி = ஆட்டம். “நடிகொள் நன்மயில் சேர்திரு நாரையூர்” (தேவா. 216:5).

நடிகன் = நாடக மேடையில் நடிப்பவன். நடிகன்- வ.நடிக.

நடிகை = நாடக மேடையில் நடிப்பவள். நடிகை- வ. நடிகா.

=

நடி - நடம் = தாண்டவம். "இரத முடைய நடமாட் டுடையவர்” (திருக்கோ.57).

நடம் - வ.நட (நட்ட).