பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




54

வேர்ச்சொற் கட்டுரைகள்

நடன்- நடி = நடனப்பெண் (திவா.).

நடி- வ.நடீ (நட்டீ).

நடம் - நட்டம் = நடனம். "நட்டம் பயின்றாடு நாதனே” (திருவாச. 1:89).

நட்டம் - வ. நாட்ய, ந்ருத்த; பிரா. நட்ட.

நட்டம் - நட்டவம் = நடம்பயிற்றுந் தொழில். "நட்டவஞ் செய்ய நட்டவம் ஒன்றுக்கு”(S.I.I.II, 274).

நட்டவம் - நட்டுவம் = நடம்பயிற்றுந் தொழில்.

தெ.நட்டுவ.

நட்டுவம் - நட்டுவன் = நடம் பயிற்றுவோன், ஆட்டு விப்போன். “உயிரையெல்லா மாட்டுமொரு நட்டுவனெம் மண்ணல்” (திருவாதபு. புத்தரை. 75).

ம. நட்டுவன், தெ. நட்டுவுடு, க.நட்டுவ.

.

நட்டுவம் - நட்டு = 1. நடம். 2. நடன். 3. நட்டுவன். இனி, நட்டம்- நட்டு - நட்டுவம் என்றுமாம். ஒ.நோ: முட்டு - முட்டுவம்- முட்டுவன்.

நடி + அனம் - நடனம் = 1. கவின்கூத்து. 2. குதிரை நடை. “பதினெட்டு நடனத்தொழில் பயிற்றி” (கொண்டல்விடு. 176). 3. பாசாங்கு. 4. மாமாலம் (இந்திரசாலம்). “நன்றுநன்றுநீ நம்முனர்க் காட்டிய நடனம் ” (கந்தபு. அவைபுகு. 87).

நடனம் -வ.(நட்டன) நடன.

நடனம் - நடனன் = கவின்கூத்தன்.

நடனன் - நடனி

=

கவின் கூத்தி. "நடித்தெதிர் நடந்த தன்றே

நடனியர் தம்மின் மன்னோ” (இரகு. ஆற்று. 20).

நடி– அகம் = நாடகம் = 1. நடம் (பிங்.). 2. கதை தழுவி வருங் கூத்து.

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்

பாடல் சான்ற புலனெறி வழக்கம்"

(தொல்.அகத். 53)

நாடகம் -வ. நாடக (நாட்டக).

நளி - நளினம் = 1. நயச்சொல். “பயிலு மானவர் பேச னளினமே” (சேதுபு. திருநா. 115). 2. நகையாட்டு. 3. முகமன்.