பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நுல் (பொருந்தற் கருத்துவேர்)

55

நள் - நய் - நய. நயத்தல் = 1. விரும்புதல். “பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று” (குறள். 150). 2. அன்பு செய்தல் (சூடா.). 3 விருப்பூட்டுதல். 4. மகிழ்தல். “வல்லை மன்றநீ நயந்தளித்த” (புறம்.59). 5. பாராட்டுதல். "நல்லறி வுடையோர் நயப்பது வேண்டியும்” (பத்துப். நச். உரைச்சிறப்.). 6. 7. இணங்கிப்போதல். 8. இனிமையுறுதல். "நஞ்சினுங் கொடிய நாட்ட மமுதினு நயந்து நோக்கி” (கம்பரா. பூக்கொய். 7). 9. மேம்படுதல். 10. மலிவாதல். இவ்வாண்டு தவசம் நயத்துவிட்டது.

கெஞ்சுதல்.

நய- நயம் = 1. விருப்பம். 2. அன்பு. “நயந்தலை மாறுவார் மாறுக (கலித். 80). 3. தெய்வப்பற்று. “பஃறளியு நயங்கொண்டு பணிந்தேத்தி” (தணிகைப்பு. பிரமன். 54). 4. நன்மை. “நயமுணராக் கையறியா மாக்கள்” (நாலடி. 163). 5. பணிவொழுக்கம். "சான்றோரை நயத்திற் பிணித்து விடல்” (நான்மணி. 12). 6. பயன். “நல்வினை யுந்நயந் தந்தின்று.’ (திருக்கோ.26). 7. இனிமை. “நாரத முனிவர்க் கேற்ப நயம்பட வுரைத்த நாவும்” (கம்பரா. கும்பகரு. 1). 8. மிகுதி. 9. மேம்பாடு. 10. மலிவு. காய்கறி விலை நயமாயிருக்கிறது (உ.வ.). 11. நேர்த்தி. 12. நேர்மை.

க.,து.நய.தெ.நயமு.

நயம் – நயன் = 1. நன்மை. 2. ஒப்புரவு. நயனுடையான்கட் படின்” (குறள். 216). 3. நேர்மை. 'நயன்சாரா நன்மையின் நீக்கும் ” (குறள். 194).

நயப்பு = 1. விருப்பு, அன்பு. “நல்லாளொடு நயப்புற வெய்தியும்” (திருவாச. 2:12). 2. பாராட்டு. 3. இன்பம். "நயப்புறு சித்தரை நலிந்து வவ்வின” (கம்பரா. கரன்வதை. 47). 4. நன்மை. 5. மேம்பாடு. 6. மலிவு.

நய - நச- நசை. நசைதல் = 1. விரும்புதல். “எஞ்சா மண்ணசைஇ" (மணிமே. 19:119). 2. அன்பு செய்தல். “நசைஇயார் நல்கா ரெனினும்” (குறள்.1199)

நசை = 1. ஈரம் (W.). 2. அன்பு. 'நசையிலார் மாட்டு நசைக்கிழமை செய்வானும்” (திரிகடு. 94). 3. ஆசை. “நசைதர வந்தோர் நசைபிறக் கொழிய” (புறம். 15). 4. நம்பிக்கை. “அரிதவர் நல்குவ ரென்னு நசை” (குறள். 1156). ப.க.நசெ.

நசை = நண்பர் (பிங்.).

நச - நசு - நச்சு. நச்சுதல் = விரும்புதல். "நச்சப் படாஅ தவன்” (குறள். 1004). க.நச்சு.