பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நுல் (பொருந்தற் கருத்துவேர்)

யெடுக்க நேர்ந்துகொண்டான் (உ.வ.).

59

நேர்- நேர்ச்சி = 1. நிகழ்ச்சி. 2. நட்பு. "கொடைபகை நேர்ச்சி” (நன். 298).

நேர்த்தம் = 1. நட்பு. 2. உடன்பாடு. இருவர்க்கும் நேர்த்தமில்லை (2.01.).

நேர்த்தி = 1. நேரான நிலை. 2. திருந்திய நிலை. 3. சிறப்பு. 4. பொருத்தனை. நேர்த்திக்கடன்(உ.வ.)

நேர்முகம் = 1. எதிர்முகம். 2. உடன்பாடு.

நேர்ப்பு = நேர்த்தி. நேர்ப்பம் = 1. இயற்கை மூலம் (பிரகிருதி) (ஈடு, 8 : 1 : 6), 2. திறமை. “சுழற்றிய நேர்ப்பம் இருந்தபடி” (திவ். இயற். திருவிருத். 51, வியா.).

நேர் = 1.ஒப்பு. “தன்னே ரிலாத தமிழ்” (தனிப்பாடல்). 2. உவமை. 3. பொருந்திய வரிசை. 4. நேர்நிலை. 5. நேர்மை (நீதி). 6. ஒழுங்கு. 7. ஒழுக்கம். 8. திருந்திய தன்மை. 9. எதிர். 10. தனிமை (திவா.). 11. உயிர் அல்லது உயிர்மெய் தனித்த நேரசை.

ம.க. நேர், தெ. நேரு, து. நேரெ.

நேர் - நேரம் = 1. வினைநேருங் காலப்பகுதி. “நேரம் பார்த்து நெடுந்தகைக் குரிசிலை மீட்டிடம் பெற்று” (பெருங். உஞ்சைக். 57: 74). 2. தக்க சமையம் (திருக்கோ. 290, துறைவிளக்கம்). 3. இரு சாமங்கொண்ட அரைநாள் (திவா.).

ம. நேரம், இ. தேர்.

நெள் - நெய். நெய்த்தல் = 1. ஒட்டுதல். 2. ஒட்டும் பசைத்தன்மை யுடையதாயிருத்தல். 3. பளபளத்தல். “நீண்டு குழன்று நெய்த்திருண்டு” (கம்பரா. உருக்காட்டு. 57) 4. ஒட்டும் நீர்ப் பொருளாக உருகும் கொழுப்பு வைத்தல், கொழுத்தல்.

நெய்த்தமீன்(W.).

நெய்

=

1. ஒட்டும் நீர்ப்பொருள் (எண்ணெய்). "நெய்யணி மயக்கம்” (தொல். கற்பு. 5). 2. ஆவின் அல்லது எருமையின் நெய். “நீர்நாண நெய்வழங்கியும்” (புறம். 166). 3. அந் நெய்யாக உருக்கப்படும் வெண்ணெய். “நெய்குடை தயிரி னுரையொடும்” (பரிபா. 16 : 3). 4. புழுகுநெய். "மையிருங் கூந்த னெய்யணி மறப்ப" (சிலப். 4 : 56), 5. நெய்போ லொட்டுந் தேன். "நெய்க்கண் ணிறாஅல்” (கலித். 42). 6. நெய்போ லுறையும் அரத்தம். “நெய்யரி பற்றிய நீரெலாம்” (நீர்நிறக்.