பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




80

வேர்ச்சொற் கட்டுரைகள்

பொலி - பொலிசை = 1. ஊதியம். “பொன்பெற்ற பொலிசை பெற்றார் பிணையனார்” (சீவக. 2546). 2. வட்டி. "பொலிசைக்குக் கொண்டவூரும்” (S.I.I. II, 82). ம. பொலிச.

பொலியூட்டு = பொலிசையூட்டு. (S. I. I. III, 84 : 88).

பொலிசை- பலிசை = 1. ஊதியம். பலிசையாற் பண்டம் பகர்வான். (பு.வெ. 12, வென்றிப். 2). 2. வட்டி. ம.பலிச.

இப் பொன் பதினெண் கழஞ்சே மூன்று மஞ்சாடி குன்றிக்கும் பலிசையாற் சந்திராதித்தவல் அட்டுவோமானோம். (S.I.II, 116).

பொலி - (பொளி) பொழி. பொழிதல் =(செ. குன்றாவி.) 1. திரண்டு பெய்தல். “கழிந்தது பொழிந்தென வான்கண் மாறினும்” (புறம். 203). 2. மிகச்செலுத்துதல். "இளங்கோளரி பொழிந்தான்” (கம்பரா. நிகும்பலை. 118). 3. மிகுதியாய்க் கொடுத்தல் (சூடா.). 4. தட்டுத் தடங்கலின்றி விரைந்து பேசுதல்.

(செ.கு. வி.) 1. நிறைதல். “பொழிமணித் தண்டூண்” (பெருங். உஞ்சைக். 47 : 110). 2. நிறைந்தொழுகுதல் “புரப்போன் பாத்திரம் பொழிந்தூண் சுரந்து” (மணிமே. 14:49).

பொழித்தல் = திரட்டுதல்.

பொழிப்பு = திரட்டு. பொழிப்புரை = திரட்டுரை.

பொல்- பொல்கு- பொலுகு. பொலுகுதல் = அதிகப்படுதல். தெ. பொலசு (Z)

பொழி- பொழில் = 1. பெருமை (பிங்.). 2. சோலை (பிங்.). “காவ தப்பொழிற் கப்புறம்” (கம்பரா. வனம்புகு 52). 3. பூந்தோட்டம் (திவா.). “அணிமலர்ப் பூம்பொழி லகவயின்” (மணிமே. பதி. 38). 4. ஞாலம். “பொழில் காவலன்” (பு.வெ. 6:6). 5. உலகம். “நல்கித்தான் காத்தளிக்கும் பொழிலேழும்” (திவ். திருவாய். 1: 4: 5). 6. நாடு (சூடா.). 7. நாட்டின் கூறு. “நாவலந் தண்பொழில்” (பெரும்பாண். 465).

குறிப்பு :

1. பருத்தல் என்பது ஒன்றற்கும் பலவின் ஈட்டத்திற்கும் பொதுவாம்.

2. பருத்தல், மிகுதல், தொகுதல், செறிதல், நிறைதல் என்பன ஓரினக் கருத்துக்கள்.