பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/126

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

117



'மறைந்தவை' சொல்வாரைத் தப்பாது அறிந்து அவரிடம் சென்று, அவர்தாமே அம் மறைபொருள்களைச் சொல்லுமாறு குரங்கெறி விளங்காயாகச் சில சொற்களைச் சொல்லியும் சில வினைகளைச் செய்தும், அம் மறைபொருள்களை அவர் வாயினின்று கேட்கும்போதும் அவர் தன்னை எள்ளளவும் அயிராவாறு அச் செய்தியில் தான் முற்றும் பற்றற்றவன்போல் நடித்து, அவர் சொல்வதனைத்தையுங் கேட்க வேண்டியிருத்தலின் ‘கேட்க வற்றாகி' யென்றும், கேட்டவற்றைத் தானே ஐயுற்று வந்து சொல்லின் அரசன் இவற்றிற்கேற்ற வினைசெய்ய முடியாமற் போவதுடன் கலக்கமுங் கொள்ள நேருமாதலின் 'ஐயப்பா டில்லதே' யென்றும், கூறினார். வல்லது - வற்று (வல் + து). ஏகாரம் தேற்றம். 'ஒற்று' பொருளால் உயர்திணையாயினும் சொல்லால் அஃறிணையாதலின், அஃறிணை முடிபு கொண்டது. இந் நான்கு குறளாலும் ஒற்றின் இலக்கணங் கூறப்பட்டது.

588. ஒற்றொற்றித் தந்த பொருளையு மற்றுமோ ரொற்றினா லொற்றிக் கொளல்.

(இ-ரை.) ஒற்று ஒற்றித் தந்த பொருளையும் - ஓர் ஒற்றன் ஒற்றிவந்து அறிவித்த செய்திகளையும்; மற்றும் ஓர் ஒற்றினால் ஒற்றிக் கொளல் - வேறும் ஓரொற்றனால் ஒற்றுவித்து ஒப்புநோக்கி உண்மையறிந்து கொள்க.

பகைவரோ டொத்துநின்று உண்மைக்கு மாறாகக் கூறும் ஒற்றரு மிருப்பராதலின், ஓரொற்றன் கூற்றைக் கேட்டமட்டில் நம்பிவிடக் கூடாதென்றும், ஒற்றர் பலரையுந் தனித்தனி மறைவாகக் கேட்டு அவர் கூற்றுகள் ஒத்துவந்த வழியே நம்பவேண்டு மென்றும், பாதுகாப்புக் கூறினார். ஒற்றுதல் மறைவாகப் பொருந்தியறிதல். உம்மை யிரண்டனுள் முன்னது உயர்வு சிறப்புக் கலந்த எச்சம்; பின்னது இறந்தது தழுவிய எச்சம். இதனால் ஒற்றரை ஆளும்வகை கூறப்பட்டது.

589. ஒற்றொற் றுணராமை யாள்க வுடன்மூவர் சொற்றொக்க தேறப் படும்.

(இ-ரை.) ஒற்று ஒற்று உணராமை ஆள்க - ஒற்றரை யாளுமிடத்து ஒருவனை யொருவன் உய்த்துணர்வாலும் அறியாதவாறு தனித்தனி ஆள்க; உடன் மூவர்சொல் தொக்க தேறப்படும் - அங்ஙனம் ஆளப்பெற்ற ஒற்றர் மூவர் கூற்று ஒத்துவரின் அதையே உண்மையென்று தெளிதல் வேண்டும்.