பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/132

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

123



மக்களாகார், மரங்களாவர்; மக்கள் ஆதலே வேறு - மக்கள் வடிவி லிருப்பதே இம் மரங்களுக்குக் குலமரங்களொடு வேற்றுமையாம்.

உயர்விற்கும் நன்மைக்கும் ஏதுவான வினைமுயற்சியின்மையின், அதை இயங்காமையாகக் கொண்டு 'மரம்' என்றார். உள்ளத்தால் இயங்காது காலால் மட்டும் இயங்குவது மக்களியக்க மன்றென்பது கருத்து. மரங்கள் இயங்காவிடினும், அவற்றுள் ஒருசாரன வேர் முதல் விதைவரை இருதிணை யுயிரிகட்கும் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுவனவாம். இவ் விரு வகையிலும் பயன்படாதனவும் காய்ந்தால் விறகாகவேனும் உதவாமற் போகா. இப் பயன்பாடு ஊக்கமில்லா மாந்தர்க்கின்மை, 'மக்களாதலே வேறு' என்று குறித்த வடிவு வேறுபாட்டாற் குறிப்பாகப் பெறப்பட்டதாம்; 'மரம்' வகுப்பொருமை. ஏகாரம் பிரிநிலை.

அதி. 61 - மடியின்மை அதாவது, வினைமுயற்சியிற் சோம்புதலின்மை. ஊக்கமுடையார்க்கும் வெப்பம் மிக்க வானிலையாலேனும், உணவின் தன்மையாலேனும், சோம்பேறிகளின் கூட்டுறவாலேனும், நெஞ்சுரக் குறைவினாலேனும், சிற்றின்ப ஈடுபாட்டாலேனும், ஒவ்வொரு சமையத்தில் மடிநேர்தலின், அதை விலக்குதற்கு இது ஊக்கமுடைமையின் பின் வைக்கப்பட்டது.

601. குடியென்னுங் குன்றா விளக்க மடியென்னு மாசூர மாய்ந்து கெடும்.

(இ-ரை.) குடி என்னும் குன்றா விளக்கம் - தான் பிறந்த குடியாகிய நந்தா விளக்கு; மடி என்னும் மாசு ஊர மாய்ந்து கெடும் - சோம்பல் என்னும் தூசி அடைவதால் ஒளிமழுங்கிக் கெடும்.

அரண்மனைப் பள்ளியறைகளிலும் கோயில்களின் உண்ணாழிகைகளிலும் இரவும் பகலும் ஒளியிருத்தற் பொருட்டு, நுந்தா விளக்கும் நந்தா விளக்கும் வைப்பது பண்டை வழக்கம். நுந்தா விளக்கு என்பது தூண்டா விளக்கு. அது தீண்டாவிளக்கு எனவும்படும். தீண்டுவது திரியை. திரி எரிவது எண்ணெயால். ஆகவே, நுந்தா விளக்கு அல்லது தீண்டாவிளக்கு என்பது கோழிமுட்டை அல்லது எலுமிச்சம்பழ அளவாக விருந்து பேரொளிவிடும் பெறற்கருமணியாம். அது மணிவிளக்கு எனவும்படும். நுந்துதல் தூண்டுதல் (தீண்டுதல்). நுந்தா விளக்கு என்பது நந்தா விளக்கு என்றும் திரியும்.