பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/134

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

125



603. மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த குடிமடியுந் தன்னினு முந்து.

(இ-ரை.) மடி மடிக்கொண்டு ஒழுகும் பேதை பிறந்த குடி - அழிக்கும் இயல்புள்ள சோம்பலைத் தன்னிடங் கொண்டொழுகும் அறிவிலி பிறந்த குடி; தன்னினும் முந்து மடியும் - அவனினும் முற்பட அழிந்துபோம்.

அழிவு தருவதை உடன் கொண்டொழுகலாற் 'பேதை' என்றும், அவனாற் காக்கப்படாமையின் அவனினும் முந்துற வழியும் என்றும், கூறினார். முந்துற வழிதலாவது அவனொடு தொடர்பின்றி மறைதல்.

604. குடிமடிந்து குற்றம் பெருகு மடிமடிந்து . மாண்ட வுஞற்றி லவர்க்கு.

(இ-ரை.) மடி மடிந்து மாண்ட உஞற்று இலவர்க்கு - சோம்பலில் வீழ்ந்து சிறந்த முயற்சி யில்லாதவராய் வாழ்வார்க்கு: குடிமடிந்து குற்றம் பெருகும் - குடியுங் கெட்டுக் குற்றமும் பெருகும்.

'உஞற்று' என்னும் சொல்வரலாறு 562ஆம் குறளுரையிற் கூறப்பட்டது. குற்றம் மேற்கூறப்படும்.

605. நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்.

(இ-ரை.) நெடுநீர் மடி மறவி துயில் நான்கும் - நீட்டிக்குந் தன்மை. சோம்பல், மறதி, தூக்கம் என்னும் நான்கும்; கெடும் நீரார் காமக் கலன் - இறக்கும் நாள் நெருங்கியவர் விரும்பியேறும் மரக்கலங்களாம்.

நெடுநீர் என்பது விரைந்து செய்யக் கூடியதை நீட்டித்துச் செய்யும் இயல்பு.மடி என்பது முயற்சிசெய்யாது சும்மாவிருக்குஞ் சோம்பல். மறவி என்பது செய்ய வேண்டியதை மறந்துவிடுதல். துயில் என்பது பகலுந் தூங்குதல் அல்லது தூக்கநிலையி லிருத்தல். இந் நான்கும் ஊக்கமின்மையின் வகைகளாதலின் உடனெண்ணப்பட்டன. நெடுநீர் என்னும் காலநீட்சிபற்றிய பண்புப்பெயர் அக்காலத்தில் நிகழும் செயல்மேல் நின்றது. கெடுநீர் - இறப்பு நெருங்கிய தன்மை. நெடுநீர் முதலிய நான்கும் ஊக்கமில்லார்க்கு இன்பந் தருவனபோற் காட்டிப் பின்பு மீளாத் துன்பமாகிய அழிவைத் தருவதால், அவை வாழ்நாளெல்லை யடுத்தவர்க்கு இன்ப நீர்ச்செலவு நிகழ்த்துவதுபோற் காட்டி, அவர் விரும்பி ஏறியபின் அவரை நடுக்கடலில் வீழ்த்திவிடும்