பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/138

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

129



மேலும் மேலிருந்து மேற்கும் மீண்டும் மேலிருந்து கீழும் ஆக மூவெட்டுப் போற் புறக்கண்ணிற்குத் தோன்றுவதால், அது மூவெட்டால் ஞால முழுவதையும் கடப்பதாகச் சொல்லப்பட்டது. வேத ஆரியர் கதிரவனை விண்டு (விஷ்ணு) என அழைத்ததால், திருமால் மூவடியால் உலகமுழுவதையும் அளந்தான் என்றொரு கதையெழுந்தது. இதுவே, குறள் தோற்றரவுக் கதைக்கு மூலம். இதன் விளக்கத்தை என் 'தமிழர் மதம்’ என்னும் நூலிற் கண்டுகொள்க. கதிரவன் நாள்தோறும் அளந்தாலும், முன்னை நிகழ்ச்சிபற்றி, 'அடியளந்தான்' என்று இறந்தகால வினையாலணையும் பெயராற் குறிக்கப் பெற்றது. உழிஞைக்கொடி முடக்கொற்றான் (முடங்கொன்றான்) என்றும் சுடுகாடுமீட்டான் என்றும் பெயர் பெற்றிருத்தல் காண்க. 'தாஅய' இசைநிறை யளபெடை. தா - தாய் - தாய. ஒ. நோ: ஆ -ஆய் ஆய.

அதி. 62-ஆள்வினையுடைமை அதாவது, இடைவிடாது கருமத்தை ஆண்டு நடத்துந் திறம். இது மடியின்மையால் நேர்வதாகலின் அதன்பின் வைக்கப்பட்டது.

611. அருமை யுடைத்தென் றசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்.

(இ-ரை.) அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும் - ஒருவினை செய்யுமுன் தம்மைச் சிறியவராகக் கருதி அவ் வினை தம்மாற் செய்தற்கு அரிதென்று தளராமை வேண்டும்; முயற்சி பெருமை தரும் - முயற்சியே அவ் வினையைச் செய்து முடித்தற்கேற்ற பெருமையைத் தமக்கு உண்டாக்கும்.

சிறியவராகக் கருதி யென்பது பெருமை தரும் என்பதால் வருவிக்கப்பட்டது. வினை செய்தல் என்பது அதிகாரத்தால் வந்தது. விடாமுயற்சியால் அரிய வினையும் எளிய வினையாம். ஆகவே, வினை முடிப்பதற்கு ஏதுவாக மட்டுமன்றி அதன் விளைவாகவும் பெருமை உண்டாகுமென்பதாம்.

612. வினைக்கண் வினைகெட லோம்பல் வினைக்குறை தீர்ந்தாரிற் றீர்ந்தன் றுலகு.

(இ-ரை.) வினைக்குறை தீர்ந்தாரின் உலகு தீர்ந்தது - இன்றியமையாத வினையைச் செய்யாது விட்டவரை உலகம் போற்றாது விட்டது; வினைக்