பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/139

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

130

திருக்குறள்

தமிழ் மரபுரை



கண் வினைகெடல் ஓம்பல் - ஆதலால், எடுத்துக்கொண்ட நன்முயற்சியில் தொடர்ந்து வினை செய்யாதிருத்தலை ஒழிக.

நிறை என்பதன் மறுதலையான குறையென்னுஞ் சொல், ஒரு பொருள் அல்லது உறுப்பு இல்லாக் குறையை முதலிற் குறித்து, பின்பு அக் குறையால் ஏற்படும் தேவையையும் தேவையான பொருளையும் ஆகுபெயராக வுணர்த்திற்று. 'ஓம்பல்' என்றது நேராதவாறு காத்தலை. 'தீர்ந்தன்று' என்பது செய்தன்று என்னும் வாய்பாட்டு வினைமுற்று செய்தனது - செய்தன்று (ஒருமை), செய்தன (பன்மை). 'உலகு' ஆகுபெயர்.

613. தாளாண்மை யென்னுந் தகைமைக்கட் டங்கிற்றே வேளாண்மை யென்னுஞ் செருக்கு.

(இ-ரை.) வேளாண்மை என்னும் செருக்கு - எல்லார்க்கும் நன்றி செய்தல் என்னும் பெருமிதம்; தாளாண்மை என்னும் தகைமைக்கண்ணே தங்கிற்று - விடாமுயற்சி என்று சொல்லப்படும் உயர்ந்த பண்பையே நிலைக்களமாகக் கொண்டதாம்.

வெறுங்கையால் வேளாண்மை செய்தல் கூடாமையின், வேளாண்மைக்கு இன்றியமையாத பொருள் தாளாண்மையாலேயே வருதல்பற்றி, 'தகைமைக்கட் டங்கிற்றே' என்றார். பிரிநிலை யேகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது.

614. தாளாண்மை யில்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும்.

(இ-ரை.) தாளாண்மை இல்லாதான் வேளாண்மை - விடாமுயற்சி யில்லாதவன் எல்லார்க்கும் நன்றிசெய்தலை மேற்கொள்ளுதல்; பேடிகை வாள் ஆண்மை போலக் கெடும் - போருக்கு அஞ்சும் பேடி போர்க்களத்தில் தன் கையிலுள்ள வாளைப் பயன்படுத்தல்போல் இல்செயலாம்.

பேடிக்கு வாளாண்மை இல்லாததுபோல், விடாமுயற்சி யில்லானுக்குத் தாளாண்மை யில்லையென்பதாம். ஆண்மை ஆளுந்தன்மை. ஆளுதல் பயன்படுத்துதல். 'வாளாண்மை’ யென்பதற்கு வாளாற் செய்யும் ஆண்மை யென்று சிலர் உரைத்திருப்பதாகத் தெரிகின்றது. அது வேறு ஆண்மையுண்மையைக் குறிப்பதால், அது உரையன்மை அறிக. பெள் - பெண் - பேண் - பேடு - பேடன், பேடி ஆண்டன்மையை விரும்பும் பெண் பேடன்; பெண்