பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/145

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

136

திருக்குறள்

தமிழ் மரபுரை



இன்பமுந் துன்பமும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்தனவென்றும், ஒரு துன்பத்தை இன்பமென் றெண்ணின் அதனால் ஒரு தொல்லையு மில்லை யென்றும், உண்மை யறிந்தவனை 'அறிவுடையான்' என்றும், அவன் துன்பத்தை வெல்லும் விரகு (உபாயம்) ஒரு நொடிநேர நினைவே யென்பார் 'உள்ளக் கெடும்' என்றும் கூறினார்.

623. இடும்பைக் கிடும்பை படுப்ப ரிடும்பைக் கிடும்பை படாஅ தவர்.

(இ-ரை.) இடும்பைக்கு இடும்பை படாதவர் - துன்பம் வருங்கால் துன்பப்படாதவர்; இடும்பைக்கு இடும்பை படுப்பர் - அத் துன்பத்திற்கே துன்பஞ் செய்வர்.

துன்பத்தின் நோக்கமே வருத்துதலாதலின், அத் துன்பத்திற்கு வருந்தாதவர் அதன் நோக்கத்தைத் தோற்கடித்தலால் அத் துன்பத்தையே வருத்துவர் என்றார். இதனால் துன்பத்தால் தடையுறாது வினை இனிது முடியும் என்பதாம். இதில் வந்துள்ளது சொற்பொருட் பின்வருநிலையணி. வருகின்ற இரு குறளிலும் துன்பம் துன்பப்படும் என்பதற்கு இவ்வாறே உரைக்க.

624. மடுத்தவா யெல்லாம் பகடன்னா னுற்ற விடுக்க ணிடர்ப்பா டுடைத்து.

(இ-ரை.) மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான் - தடை ஏற்பட்ட விடமெல்லாம் பொறைவண்டி யழுந்தாது அதை இழுத்துச் செல்லும் எருதுபோல் எடுத்துக்கொண்ட வினையை விடாமுயற்சியுடன் வெற்றியுறச் செய்து முடிக்க வல்லவனை; உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து - அடைந்த துன்பம் தானே துன்பப்படுதலை யுடையதாம்.

'மடுத்தவா யெல்லாம்' என்பன மேடு, பள்ளம், மணல், சேறு முதலியனவாம். பகட்டின் தொழிலை,

"நிரம்பாத நீர்யாற் றிடுமணலு ளாழ்ந்து பெரும்பார வாடவர்போற் பெய்பண்டந் தாங்கி மருங்கொற்றி மூக்கூன்றித் தாடவழ்ந்து வாங்கி” (சீவக. 2781)

என்பதனாலும் பகடன்னான் இயல்பை,