பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/146

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

137



“கழியுப்பு முகந்து கன்னாடு மடுக்கும்‌ ஆரைச்‌ சாகாட்‌ டாழ்ச்சி போக்கும்‌ உரனுடை நோன்பகட்‌ டன்‌ன வெங்கோன்‌” (புறம்‌. 60)

என்பதனாலும்‌ அறிக.

625. அடுக்கி வரினு மழிவிலா னுற்ற விடுக்க ணிடுக்கட்‌ படும்‌.

(இ-ரை.) அடுக்கி வரினும்‌ - இடைவிடாது துன்பங்கள்‌ மேன்மேல்‌ தொடர்ந்து வரினும்‌: அழிவு இலான்‌ - மனங்‌ கலங்காதவன்‌; உற்ற இடுக்கண்‌ இடுக்கண்‌ படும்‌ - அடைந்த துன்பங்களே துன்பப்பட்டுப்‌ போம்‌."

துன்பம்‌ துன்பப்படும்‌ என்பதில்‌ ஆட்படையணி குறிப்பாக அமைந்‌துள்ளது. அடுக்குதல்‌ என்பது ஒருவகைத்‌ துன்பமும்‌ பலவகைத்‌ துன்பமும்‌ தழுவும்‌.

626. அற்றேமென்‌ றல்லற்‌ படுபவோ பெற்றேமென் றோம்புத றேற்றா தவர்‌.

(இ-ரை.) பெற்றேம்‌ என்று ஓம்புதல்‌ தேற்றாதவர்‌ - செல்வக்‌ காலத்தில்‌ யாம்‌ இது பெற்றேமென்று மகிழ்ந்து, கையழுத்தங்‌ கொண்டு அதைக்‌ காத்துக்‌ கொள்ளுதலை அறியாதார்‌; அற்றேம்‌ என்று அல்லல்‌ படுபவோ - வறுமைக்‌ காலத்தில்‌ யாம்‌ செல்வத்தை யிழந்தேமென்று துயரப்படுவரோ? படார்‌.

“அகடுற யார்மாட்டும்‌ நில்லாது செல்வம்‌ சகடக்கால்‌ போல வரும்‌” (நாலடி. 2)

இவ்‌ வுலகத்தில்‌, இன்பமுந்‌ துன்பமும்‌ ஒப்பக்‌ கொள்பவர்‌ செல்வக்‌ காலத்தில்‌ மகிழ்ந்து அதை இறுகப்‌ பற்றாமையால்‌, வறுமைக்காலத்தில்‌ வருந்துவதும்‌ செல்வமின்மையை உணர்வதும்‌ இல்லை யென்றார்‌. 'தேற்றாதவர்‌' தன்‌ வினைப்பொருளில்‌ வந்த பிறவினைச்‌ சொல்‌. தேற்றுதல்‌ தெளிந்தறிதல்‌.

627. இலக்க முடம்பிடும்பைக்‌ கென்று கலக்கத்தைக்‌ கையாறாக்‌ கொள்ளாதா மேல்‌.

(இ-ரை.) மேல்‌ - மேலோர்‌; உடம்பு இடும்பைக்கு இலக்கம் என்று - இவ்‌ வுலகத்தில்‌ இருதிணை யுயிரோடு கூடிய உடம்புகளும்‌ துன்பம்‌ என்னும்‌