பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/147

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

138

திருக்குறள்

தமிழ் மரபுரை



வேலுக்கு இலக்கென்று தெளிந்து; கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாது - தமக்குத் துன்பம் வந்தவிடத்து மனங்கலங்குவதை ஒழுக்க நெறியாகக் கொள்ளார்.

இலக்கு குறி. இலக்கு - இலக்கம். போர்மறவர் வேலெறிந்து பழகுவதற்குக் குறிமரமாக நிறுத்தப்படும் கம்பம் இலக்கம் எனப்படும்.

"...............வென்வேல் இளம்பல் கோசர் விளங்குபடை கன்மார் இகலினர் எறிந்த அகலிலை முருக்கின் பெருமரக் கம்பம்........." (புறம். 166)

என்பது உடம்பு துன்பத்திற்கு இத்தகைய இலக்கம் என்றது அதன் இயல்பு நோக்கி உடம்பு வகுப்பொருமை. 'மேல்' ஆகுபொருளது; சொல்லால் அஃறிணையாதலால் அத் திணைமுடிபு கொண்டது. 'ஆம்' அசைநிலை. 'கலக்கத்தைக் கொள்ளாது' என்றது இயல்பென்றறிந்து கலங்காது என்பதாம். இடும்பையை வேலென்று உருவகியாமையால் இங்குள்ளது ஒருமருங் குருவகம்.

628. இன்பம் விழையா னிடும்பை யியல்பென்பான் றுன்ப முறுத லிலன்.

(இ-ரை.) இன்பம் விழையான் - இன்பத்தைச் சிறப்பாக விரும்பாது; இடும்பை இயல்பு என்பான் - இவ்வுலக வாழ்விலும் வினை முயற்சியிலும் துன்பம் நேர்வது இயல்பென்று தெளிந்திருப்பவன்; துன்பம் உறுதல் இலன் - துன்பம் வந்தவிடத்துத் துன்பமுறுத லில்லை.

இன்பத்தைச் சிறப்பாக விரும்பாமையால் இன்பம் இல்லாவிடத்தும், ஆள்வினைஞன் துன்பமுறுதல் இல்லை யென்றார்.

629. இன்பத்து ளின்பம் விழையாதான் றுன்பத்துட் டுன்ப முறுத லிலன்.

(இ-ரை.) இன்பத்துள் இன்பம் விழையாதான் - இயற்கையாகவோ தன் முயற்சியாலோ தனக்கு இன்பம் வந்தவிடத்து அதை நுகர்ந்தும் உள்ளத்தால் இன்புறாதவன்; துன்பத்துள் துன்பம் உறுதல் இலன் - அவ் விருவழியிலும் தனக்குத் துன்பம் வந்தவிடத்து அதை நுகர்ந்தும் மனத்தால் துன்ப முறுவதில்லை. இன்பமுந் துன்பமும் ஒன்றாகக் கொள்பவன் இன்பத்தால் இன்புறுதலும் துன்பத்தால் துன்புறுதலும் இல்லை என்பதாம்.