பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




84

xi. தருக்க நடை

கட்டுரை வரைவியல்

இருவர் தருக்கிப்பதுபோல் தருக்க முறையிலிருப்பது தருக்க நடை. எ - டு : “பன்மைக்கே யன்றி ஒருமைக்கு முரியவாய் வருவன வற்றைப் பன்மைப் பெயரென்ற தென்னை யெனின்; நன்று சொன்னாய்; பெண்மைப் பெயர் முதலாயினவும் பிற பெயரா லுணர்த்தப்படாத பெண்மை முதலாயினவற்றையு முணர்த்தலானன்றே அப் பெயரவாயின, என்னை? பெண்மை முதலாயின பிற பெயராலுணர்த்தப்படுமாயின், அப் பெண்மை முதலாயினவற்றை அப் பெயர் வரைந்து சுட்டலாகாமையின். சேனாவரையர்

=

xii. கதம்ப நடை

பன்மொழிச் சொற்கள் கலந்து வருவது கதம்ப நடை.

எ-டு: யுத்தக் கமிட்டியார் பொது ஜனங்களிடம்

பணம்

வசூலிக்கிறார்கள். இது, (போர்க்குழுவார் பொதுமக்களிடம் பணம் தண்டுகிறார்கள், என்றிருத்தல் வேண்டும்.)

கொடும்புணர், தற்சம மணிப்பவளம், கொச்சை என்னும் மூன்று நடைகளும் கட்டுரைக்கேலா. கொடுந்தமிழ் நடை அதற்குரிய நாட்டிற் கேற்கும். எதுகை நடையும் இலக்கிய நடையும் தமிழறிவு சிறந்தாரால் மட்டும் தழுவப்படுவன.

இன்று பேச்சுவழக்கிலுள கதம்பநடை கொச்சை நடை போன்றே மிக இழிவானது.

4. வழக்கியல் (Usages)

i. தகுதி வழக்கு (Euphemism & Conventional Terms)

தகுதிவழக்கு இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி என மூவகைப்படும். கால் கழுவினான், ஒன்றுக்குப் போனான், “பன்றியோடு சேர்ந்த கன்றும் பவ்வீதின்னும்” என்பன போன்றவை இடக்கர் அடக்கல். இறைவன் திருவடி நிழலை யடைந்தார், கடவுட்குள் துயிலடைந்தார், நன்காடு (சுடுகாடு அல்லது இடுகாடு என்பன) போன்றவை மங்கல வழக்கு. ஒரு வகுப்பார் பிறர்க்கு விளங்காதபடி தமக்குள் மட்டும் வழங்கும் மறைபொருட் சொற்கள் குழூஉக்குறியாம்.