பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கட்டுரையியல்

121

களைதலும், (8) எப்போதும் மன அமைதியோடும் மகிழ்ச்சியோடும் இருத்தல் - பயன்: (1) நன்றாய் வேலை செய்தல், (2) பிறருக் குதவல்,(3) இன்பம் நுகர்தல், (4) நீடு வாழ்தல் - முடிவு.

iv. நட்பு (Friendship)

வரையறை - தேவை - நட்பாராய்தல் - நட்பு வகை : (1) பனை தென்னை கமுகு போன்ற தலை இடை கடை நட்பு, (2) வளர்பிறை தேய்பிறை போன்ற பெரியோர் சிறியோர் நட்பு, (4) மெய்ந்நட்பு, பொய்ந்நட்பு (பகைவரது), (5) தற்காலிக நட்பு, நீடுநட்பு, (6) பிரிவாற்று நட்பு, பிரிவாற்றா உயிர் நட்பு, (7) கண்டு நட்கும் நட்பு, காணாமலும் நட்கும் உணர்ச்சி நட்பு - நட்பிடை யொழுக்கம்; கூடிப்பிரியாமை, பிழை பொறுத்தல், பொறுக்க முடியாவிடின் தூற்றாது நீங்கல் - நட்பின் பயன் : ஒருவரையொருவர் நல்வழிப் படுத்தலும் ஒருவருக்கொருவர் உதவலும் எடுத்துக்காட்டுக் கதை : கபிலரும் பாரியும், சீநக்கரும் பொய்யாமொழியாரும், கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையாரும் (இவற்றுள் ஒன்று.) - முடிவு.

V. பள்ளிக்கூட விடுமுறையைக் கழிக்கும் தலைசிறந்த வழிகள் (The best ways of spending a school vacation)

விடுமுறையின் வரையறை

-

விடுமுறை கழிக்கும் வழிகள் : (1) இளைப்பாறல், (2) பெரியோர்க் குதவல், (3) கைத்தொழில் அல்லது பிற கலை கற்றல், (4) பொதுநலத் தொண்டு, (5) புறப் போக்கு, (6) பற்றாட்டு, (7) பொருளீட்டல் - முடிவு.

vi. நகர நலவழி (சுகாதாரம்) (Sanitation of a town)

நகராண்மைக் கழக(Municipality) வேலைகள் வீட்டமைப்பு விதிகள் - தெரு, வீடு, குடிநீர் முதலியவற்றின் துப்புரவு - இலவச மருத்துவமும் நோய் முற்காப்பும் - பூங்கா (Park) அமைத்தல் - நல்வழி (சுகாதார) வாரக் கொண்டாட்டம்; பொருட்காட்சி, படக்காட்சி, சொற்பொழிவு, துண்டறிவிப்பு முதலியவற்றின் வாயிலாய் நலவழியறிவு புகட்டல், கீழோரைத் துப்புரவாயிருக்குமாறு ஊக்கல் - அரசியலார் தீயபொருள் விற்பனையைத் தடுத்தல் - முடிவு.

vii. காலத்தின் அருமை (The value of time)

காலத்தின் வரையறை

காலத்தினருமை யுணரப்படும் சமயங்கள் - வாழ்நாள் வரையறை முன்னறியப்படாமை - ஒவ்வொரு பருவத்திலும் அததிற் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தல் - தகுந்த காலத்திலும் வரிசை முறையிலும் காரியங்களைச் செய்தல் அட்டவணை அமைத்துக்கொண்டு வினை செய்தல்

-

கால

ஒவ்வொரு