பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொற்றொடரியல்

இனிமைபற்றிக் கவனிக்கவேண்டிய சில குறிப்புகள்:

71

1) புணர்க்கக்கூடிய சொற்களைப் பெரும்பாலும் புணர்த் தெழுதுதல்.

2) சில சொற்களின் பல்வடிவங்களில் இன்னோசையுள்ள வற்றைக் கொள்ளல்.

3) இயன்றவரை தென்சொற்களை அமைத்து எழுதுதல்.

-

டு:

சொல்

அதனாலே, என்ன,

இனிய வடிவம்

செய்கிறான், செலவுகளுக்கு

அதனானே, என்னை, செய்கின்றான், செலவுகட்கு,

செய்தல் வேண்டும்.

செய்ய வேண்டும்

4) சொற்சுருக்கம்.

எ - டு : ஏற்கமாட்டா ஏலா.

xi. சுருக்கம் (Brevity)

வேண்டாத சொற்களை விலக்கிப் பொருள் விளங்குமளவில் இயன்றவரை சுருக்கியெழுதுவது சுருக்கமாகும்.

'இரண்டு பேர்' என்பது 'இருவர்' என்றும், 'எவன் தேறுகிறானோ அவனுக்கு' என்பது 'தேறுகிறவனுக்கு' என்றும், 'வடக்கேயுள்ள ஒரு நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்த ஓர் ஆரிய இனத்து மன்னன்' என்பது, 'ஒரு வடநாட்டை யாண்ட ஆரிய மன்னன்' என்றும் சுருக்கி எழுதப்படும்.

அரைஞாண்கயிறு, அவைகள் என மிகைபடக் கூறலும் (Redundancy), அறிஞர்க்குள் அவன் தலைசிறந்தவன்; அவனுக்குச் சமானம் ஒருவருமில்லை; எனக் கூறியது கூறலும் (Tautology or Pleonasm) குற்றமாகும்.

xii. தூய்மை (Purity)

அயலெழுத்து, அயற்சொல், வழூஉச்சொல் முதலியவற்றை நீக்கித் தனித்தமிழ் எழுத்துகளாலுஞ் சொற்களாலு மெழுதுவது தூய்மையாகும். சிறப்புப் பெயராயின் அயற்சொல் தழுவப்படும்.

எ-டு: “சிறந்த தமிழ்ப் புலவருள் ஒருவராகிய கபிலர், தம் நண்பனாகிய பாரி என்னும் வள்ளல் தன் மகளிர் இருவரை