பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

113

எ-டு : அமைச்சனைவிட அரசன் பெரியவன். அண்ணனைக்காட்டில் தம்பி நல்லவன்.

காளிக்கோட்டத்தை (Calcutta) நோக்கச் சென்னை சிறுநகர்.

(2) 4ஆம் வேற்றுமையால்,

எ-டு : இல்லதிற்கு உள்ளது மேல்.

இளங்கோவடிகட்கு மூத்தவன் சேரன் செங்குட்டுவன்.

அதற்கிது பெரியது.

(3) 5ஆம் வேற்றுமையால்,

எ-டு : காவிரியிற் பெரியது கங்கை.

காக்கையிற் கரிது களம்பழம்.

காக்கையின் = காக்கையைவிட.

ஆகவே, 5ஆம் வேற்றுமை ஒப்புத்தரத்தையும் உறழ் தரத்தையும் உணர்த்தும் என்பது அறியப்படும். இது மயக்கத்திற் கிட மாதலால், உறழ்தரத்தைத் தெளிவுபடுத்தற்கு வேற்றுமை யுருபுடன் 'உம்' இடைச்சொல் சேர்க்கப்படும்.

எ-டு : நிலத்தினும் மிகுந்தது நீர்.

காக்கையினும் கரியது களாப்பழம்.

(4) நிரம்ப மிக தவ அதிக முதலிய சொற்களால்,

எ-டு : யானை பெரியது; திமிங்கிலம் நிரம்பப் பெரியது.

வ்

சாத்தன் நல்லவன்; கொற்றன் மிக நல்லவன்.

வெடுத்துக்காட்டுகளில் தாழ்பொருட் பெயரும் உயர்பொருட் பெயரும் ஒரே தனி வாக்கியத்தால் இணைக்கப் படாமல் ஒரு கூட்டுவாக்கியத்தின் வெவ்வேறு கிளவிய எழுவாயாய் வருதல் காண்க.

சொல்லின்றியும் இரு

வினாக்களில், தரங்குறிக்கும் பொருள்களுள் ஒன்றன் உயர்தரம் வினவப்படும். சொல்லுவான் அல்லது கேட்பான் கருத்தின்படி ஒன்றன் உயர்வு குறிப்பாய்க் கொள்ளப்படும். ஆனால், விடையில், உயர்ந்த பொருள் வெளிப்படையாய்க் குறிக்கப்பெறும், அதுவும் தரச்சொல்லின்றி

நிகழும்.

எ-டு : வினா : ஊன்கறி நல்லதா? மரக்கறி நல்லதா?

விடை : மரக்கறி நல்லது.