பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

(18) ஆறுகளுள் அகன்றது அமேசான்; நீண்டது நைல்நதி

117

(19) வறுமை நோய் உறுப்புக்குறை என்னும் மூன்றுள் எது மிகக் கொடியது?

(20)

ஊமை வாயனுக்கு உளறுவாயன் மேல்.

(21) மேட்டூர் அணைக்கட்டினும் பெரியது வடஅமெரிக்கா விலுள்ள போல்டர் அணைக்கட்டு; அதுவே உலகில் தலைசிறந்தது.

(22) பம்பாய் சென்னையை நோக்கப் பெரியது; காளிக் கோட்டத்தை (கல்கத்தாவை) நோக்கச் சிறியது.

(23) கூந்தலும் மனமுங் கரியவள்; புருவமும் செயலும் கொடியவள்; அருளும் இடையும் சிறியவள்; ஆசையும் கண்ணும் பெரியவள்.

(24) "நிலையில் திரியா தடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது.'

"2

(25) புலனில் தாழ்ந்தவை பயிர்பச்சை; அவற்றினும் உயர்ந்தவை சங்குசிப்பி; அவற்றினும் உயர்ந்தவை எறும்பு கறையான்; அவற்றினும் உயர்ந்தவை நண்டு தும்பி; அவற்றினும் உயர்ந்தவை விலங்கு பறவை; அவற்றினும் உயர்ந்தவன் மாந்தன்.

13. வாக்கியக் கூறுபடுப்பு (Analysis of Sentences)

ஒரு வாக்கியத்திலுள்ள எழுவாய் பயனிலை செயப்படு பொருள்களையும் அவற்றின் அடைகளையும் பிரித்துக் காட்டுவது, வாக்கியக் கூறுபடுப்பாகும்.

தனிவாக்கியக் கூறுபடுப்பு

ஓர் எழுவாயும் ஒரு முற்றுப் பயனிலையுஞ் சேர்ந்தது ஒரு தனி வாக்கியமென்று முன்னர்க் கண்டோம். எழுவாயையும் பயனிலையையும் குறிக்க ஒவ்வொரு சொல்லே போதுமாதலால், இரு சொல்லைக்கொண்டே ஒரு தனி வாக்கியம் அமைத்து விடலாம். எ-டு : குயில் கூவுகிறது.

இதில், ‘குயில்' எழுவாய் (Subject); 'கூவுகிறது' பயனிலை (Predicate).

ரு

சில வாக்கியங்களில், எழுவாய் அல்லது பயனிலை அல்லது அவ் விரண்டும் அடையடுத்து வரும்.