1. தொடர் வகைகள்
1
தொடரியல் (Syntex)
சொற்கள், தனித்து நிற்பதும் தொடர்ந்து நிற்பதும்பற்றி, (1) தனிச்சொல், (2) தொடர்ச்சொல் என இருவகைப்படும். தொடர்ச்சொல் எனினும் சொற்றொடர் எனினும் ஒக்கும். எடுத்துக்காட்டு : கடவுள், துணை, செய்வார்
-―
தனிச்சொல்.
கடவுள்துணை, கடவுள் துணைசெய்வார் தொடர்ச்சொல்.
தொடர்ச்சொற்கள் அல்லது சொற்றொடர்கள், அவற்றில் அமைந்துள்ள சொற்களின் தொகைபற்றி, (1) இருசொற்றொடர், (2) பல்சொற்றொடர் என இருவகைப்படும்.
இரண்டே சொற்கள் சேர்ந்த தொடர் இருசொற்றொடர்; இரண்டிற்கு மேற்பட்ட சொற்கள் சேர்ந்த தொடர் பல் சொற்றொடர்.
-
எ-டு : பழனிமலை, முருகன் வருவான் இரு சொற்றொடர் அறஞ்செய விரும்பு.
தொல்காப்பியத்தைப் பல்காற் பயில்க. ஒழுக்கமற்றவன் உயர்திணையைச் சேர்ந்தவ னல்லன்.
99
பல்சொற்றொடர்
இருசொற்றொடர், புணர்ச்சொல் அல்லது புணர்மொழி எனவும் பெயர்பெறும்.
குறிப்பு : பெயரொடும் வினையொடும் சேர்ந்தன்றிக் தனித்துவராத பலவகை விகுதிகளும், வேற்றுமையுருபுகளும், ஆ ஏ ஓ உம் முதலிய இடைச்சொற்களும், ஈற்று வினாவெழுத்துகளும், சாரியைகளும், துணைவினைகளும், இவைபோன்ற பிறவும், சொற்களாக எண்ணப்பெறா.