பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

119

செயப்படுபொருளும் எழுவாய் பயனிலைபோல் அடை வரும். அவ் வடையைச்

யடுத்து

என்னலாம்.

எ-டு : அதியமான்

அளித்தான்.

ஒளவையாருக்கு

செயப்படுபொருளடை

அருநெல்லிக்கனியை

இதில், அருநெல்லி என்பது செயப்படுபொருளடை.

கவனிப்பு: ஆங்கில விலக்கணத்தில், செயப்படுபொருளில் நேர் செயப்படுபொருள் (Direct Object), நேரல் செயப்படுபொருள் (Indirect Object) என இருவகையுண்டு. அவற்றுள், நேரல் செயப்படு பொருள் தமிழிற் பயனிலை யடையாகவே கொள்ளப்படும்.

மேற்காட்டிய வாக்கியத்தில், 'ஒளவையாருக்கு' என்பது ஆங்கில முறைப்படி நேரல் செயப்படுபொருளும், தமிழ் முறைப்படி பயனிலையடையுமாகும். ஆங்கில இலக்கணம் கற்ற மாணவர் இதைக் கவனிக்க.

பயனிலைப்பொருளை நிரப்பும் சொல், செயப்படுபொருள் குன்றியவினையை அடுத்துவரின் எழுவாயையும், செயப்படு பொருள் குன்றாவினையை அடுத்துவரின் செயப்படுபொருளையும்,

பொருளால் தழுவும்.

எ-டு: (1) ஓமந்தூர் இராமசாமி இரெட்டியார் 1947-ல்,

சென்னை மாகாண முதலமைச்சர் ஆனார்.

(2) ஓமந்தூர் இராமசாமி இரெட்டியாரை 1947-ல், சென்னை மாகாண முதலமைச்சர் ஆக்கினர்.

செயப்படு

இவற்றுள், முன் வாக்கியத்தில், முதலமைச்சர் என்னும் நிரப்பியம் எழுவாயையும்; பின் வாக்கியத்தில் பொருளையும்; பொருளால் தழுவுதல் காண்க.

எழுவாயைத் தழுவுவதை எழுவாய் தழீஇய நிரப்பியம் (Subjective Complement) என்றும், செயப்படுபொருளைத் தழுவுவதைச் செயப்படுபொருள் தழீஇய நிரப்பியம் (Objective Complement) என்றும் கூறலாம்.

செயப்படுபொருள் குன்றியவினை வரும் வாக்கியத்தில் எழுவாயாயிருப்பது செயப்படுபொருள் குன்றாவினை வரும் வாக்கியத்தில் செயப்படுபொருளா யிருப்பதே, முன்னதில் எழுவாய் தழீஇய நிரப்பிய மாயிருப்பது பின்னதில் செயப்படுபொருள் தழீஇய நிரப்பிய மாவதற்குக் காரணம் என அறிக.

பொருள் நிரம்புதற்கு ஒரு நிரப்பியத்தை வேண்டும் வினை செயப்படுபொருள் குன்றிய வினையாயின், முடியாப் பயனிலைப்