பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

ஆடு,இடு,இரு, உறு, கொள், படு, போ, போடு, வா, விடு முதலிய பல சொற்கள், பெயரொடும் வினையொடும் சேர்ந்து துணைவினைகளாக வரும்.

எ-டு: உரையாடு, வந்திடு, எழுந்திரு, கண்ணுறு, வேண்டிக்கொள், வரையப்படு, கொண்டுபோ, உடைத்துப்போடு, கொண்டுவா,

தந்துவிடு.

இச் சொற்கள் தனித்துவந்து தத்தம் பொருளை முற்றும் உணர்த்துவதுபோன்றே பெயரொடும் வினையொடும் சேர்ந்து வரும்போதும் உணர்த்தின், தனிவினைகளாம்; அன்று தனி எண்ணிக்கை பெறும்.

எ-டு : மயிலாடுதுறை, இரப்போர்க்கிடு, எழுந்து இரு, விதியுறு, விலைக்குக்கொள், பாடுபடு, எடுத்துப்போ, நிலத்திற்போடு, எடுத்துவா, குடியைவிடு.

வினைகள் துணைவினையாக வரும்போது பொருட் பாட்டில் பின்வருமாறு முந்நிலை யடையும்.

(1) பொருள் வேறுபடுதல்.

எ-டு : உரையாடு, வரையப்படு.

(2) பொருளிழத்தல்.

எ-டு : எழுந்திரு = எழு.

(3) பிரிக்க முடியாமை.

எ-டு : கொண்டுவா, கொண்டுபோ.

கொண்டுவா அல்லது கொண்டுபோ, என்னும் இருசொற் களும் பொருளால் இணைந்து ஒருசொற்றன்மைப்பட்டு நிற்றல் காண்க.

ஆளன், ஆளி, காரன், காரி முதலிய பெயரீறுகளும்; இடம், காடு, பாடு, மானம் முதலிய தொழிற்பெயர் விகுதிகளும்; கொண்டு, இருந்து, உடைய, இடத்தில் முதலிய வேற்றுமையுருபுகளும்; உடைய, உள்ள, ஆன, ஆகிய முதலிய பெயரெச்ச விகுதிகளும்; ஆய்,

டத்து, கால், ஒழிய முதலிய வினையெச்ச விகுதிகளும்; தனி எண்ணிக்கை பெறும் தகுதியற்றதுபோல, துணைவினைகளும் தகுதியற்றவை.

ஆகவே, இரு சொற்களைத் தனிச்சொல்லா தொடர்ச் சொல்லா என்றறிதற்கு, அவை இரண்டும் தலைமைச் சொற்களாய் வந்துள்ளனவா, அவற்றுள் ஒன்று துணைச் சொல்லாய் வந்துள்ளதா என்று காணுதல் வேண்டும். தலைமைச் சொற்களை எண்ணிக்கையிற்