பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

3

சேர்த்து, துணைச் சொற்களை விட்டுவிடல் வேண்டும். தலைமைச் சொல்லும் துணைச் சொல்லும் சேர்ந்த தொடர், சொல்லால் இருசொல் லாயினும் பொருளால் ஒரு சொல்லாம்.

ஒரே சொல் தலைமைச்சொல்லும் துணைச்சொல்லும் ஆவதைக் கீழ்வரும் சொல்வரிசையிற் காண்க.

தலைமைச்சொல்

காரியம் ஆனபோது

பணம் ஆய்விட்டது என் இடத்தில்

முருகனையுடைய

பெருமகன் (பெரிய மகன்)

வில் அவன் தந்தான்

துணைச்சொல்

அழகான பறவை நன்றாய் இருக்கிறது என்னிடத்தில்

முருகனுடைய

பெருமகன் (பொருமான்)

வில்லவன் தந்தான்

சொற்றொடர்கள், அவற்றின் பொருள் முடிபுபற்றி,

(1) தொடர்மொழி (Phrase)

(2) கிளவியம் (Clause)

(3) வாக்கியம் (Sentence)

என மூவகைப்படும்.

2. வாக்கியம் (Sentence)

வாக்கிய வுறுப்புகள்

எழுவாயும் பயனிலையும் அமைந்து கருத்து முடிந்த இரு சொற்றொடரும் பல்சொற்றொடரும் வாக்கியம் எனப்படும்.

நாம் பேசும்போது பல வாக்கியங்களாகப் பேசுகிறோம். நாம் பேசுவதையே (அல்லது பேசும் முறைப்படியே) எழுதுவதினால், எழுதும்போதும் அங்ஙனமே வாக்கியங்களாக எழுதுகிறோம். ஒவ்வொரு வாக்கியமும் ஒவ்வொரு முடிந்த கருத்தையுடையது. ஒரு வாக்கியத்தில் பல கருத்துகளிருந்தாலும், முடிந்த கருத்து ஒன்றுதான் இருக்கும்.

ஒரு சொற்றொடர் முடிந்த கருத்தையுடையதா யிருப்பதற்கு இரு நிலைமைகள் வேண்டும். ஒன்று எழுவாயும் பயனிலையு மிருத்தல்; இன்னொன்று பயனிலை முற்றுச்சொல்லா யிருத்தல்.

ஒவ்வொரு வாக்கியத்திலும், ஒரு பொருளைப்பற்றி ஒரு செய்தி சொல்லப்பட்டிருக்கும். எந்தப் பொருளைப்பற்றி ஒரு செய்தி சொல்லப்பட்டிருக்கிறதோ, அந்தப் பொருளைக் குறிக்கும் சொல் எழுவாய் எனப்படும். ஒரு பொருளைப்பற்றி என்ன செய்தி