பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

சொல்லப்பட்டிருக்கிறதோ, அன்ன செய்தியைக் குறிக்கும் சொல் பயனிலை எனப்படும்.

'கந்தன் வந்தான்' என்பது ஒரு வாக்கியம். இதில் 'கந்தன்' என்பவனைப்பற்றி 'வந்தான்' என்னும் செய்தி சொல்லப்பட் டிருக்கின்றது. ஆகையால், 'கந்தன்' என்பது எழுவாய்; 'வந்தான்' என்பது பயனிலை.

‘கந்தன் வந்து’ என்னும் சொற்றொடரும் அதே எழுவாயும் அதே பயனிலையும் கொண்டுள்ளதே; ஆயினும், வாக்கிய மாகாது. னெனின், வந்து என்னும் பயனிலை முற்றுச்சொல்லா யில்லை. அது வேறொரு சொல்லைக்கொண்டு பொருள் முடிவதா யிருக்கின்றது. ‘கந்தன் வந்து போனான்' என வேறொரு முற்றுச் சொல் வந்துதான் அதன் பொருள் முடிதல் வேண்டும். அன்றுதான் ‘கந்தன் வந்து' என்னும் தொடரும் பொருள் முடியும்.

'கந்தன் வந்தான்', 'கந்தன் வந்து போனான்' என்னும் சொற்றொடர்கள், முற்றுச்சொற்களைப் பயனிலையாகக் கொண்டுள்ளமையால் வாக்கியமாகும். 'வந்தான்', 'போனான்' என்பன முற்றுச்சொற்கள்.

ஆகவே, முற்றுப்பயனிலை எச்சப்பயனிலை எனப் பயனிலை இருவகைப்படும் என்பதும், எழுவாயும் முற்றுப் பயனிலையும் கொண்டுள்ள தொடரே வாக்கியம் என்பதும் அறியப்படும்.

ரு

எந்த வாக்கியமும் ஒரு பொருளைப்பற்றி ஒரு செய்தி சால்வதென்பது முன்னர்க் கூறப்பட்டது. ஒரு பொருளில்லா விட்டால் எங்ஙனம் அதைப்பற்றிய செய்தியுமில்லையோ, அங்ஙனமே ஒரு பொருளைக் குறிக்கும் சொல் இல்லாவிட்டால் அதைப்பற்றிய செய்தியைக் குறிக்கும் சொல்லுமில்லை. இவ் விரு சொல்லுமின்றி வாக்கியமுமில்லை. ஆதலால், ஒரு பொருளைக் குறிக்கும் சொல்லே (அதைப்பற்றி) ஒரு வாக்கியம் உண்டாவதற்குக் காரணமாம். இதனால், அஃது எழுவாய் எனப்பட்டது. வாக்கியம் எழுவதற்கு (உண்டாவதற்கு) வாயாக (இடமாக) இருப்பது எழுவாய். எழுவாயின் பயன் (பொருள்) நிற்குமிடம் பயனிலை.

'கந்தன்' என்று மட்டும் சொன்னால், அதன் பொருள் முடியவில்லை. அது, கந்தன் என்ன செய்தான்? கந்தனைப்பற்றி என்ன செய்தி? என்னும் வினாக்கட்கு இடந்தரும். கந்தன் வந்தான், கந்தன் நல்லவன் என வேறொரு முற்றுச் சொல்லைச் சேர்த்துக்