152
உயர்தரக் கட்டுரை இலக்கணம்
குறிப்பு : 'இனிக்கிறது', 'இனியது' என்னும் இருசொற்களும் ஒரே பொருளைக் குறிப்பனவாயினும், இவற்றுள் முன்னது தொழில் வடிவிலும் பின்னது பண்பு வடிவிலும் இருக்கின்றன என, வேறுபாடறிதல் வேண்டும்.
பயனிலையடை வடிவுகள்
பயனிலையடை பின்வருமாறு பல வடிவுகளில் வரும்:
1. வினையெச்சம்
எ-டு: வந்து (போனான்)
தெரிநிலை
இல்லாது (இருக்கிறான்) - குறிப்பு
2. வேற்றுமையேற்ற பெயர்
எ-டு : வீட்டில் (இருக்கிறான்)
மரத்தினின்று (விழுந்தது)
3. இப்பெயரையும் காலப்பெயரையும் தழுவிய பெயரெச்சம்
எ-டு : வந்தவிடத்து (நேர்ந்தது)
சொல்லும்போது (நன்றாயிருந்தது)
4.இடைச்சொல்
எ-டு : கொன்னே (கழிந்தது)
கொன்னே = வீணாக.
5. உரிச்சொல்
எ-டு : சால (உண்டான்)
நனி (சிறந்தது)
6. தொடர்மொழி
எ-டு : ஆறுமாத காலமாக (நடக்கிறது)
எத்தனைமுறை சொன்னாலும் (தெரியவில்லை)
7. கிளவியம்
எ-டு : உயிர்போனாலும் (சொல்லமாட்டான்)
8. கிளவியத்தை யுள்ளிட்ட கிளவியம்
எ-டு : மயிலே மயிலே இறகுபோடு என்றால் போடுமா?
இதன் விரிவு : மயிலே மயிலே நீ இறகு போடு என்று ஒருவர் சொன்னால் அது போடுமா? என்பது.