பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

165

(6) உ.வே. சாமிநாதையர் பழைய ஏட்டுச் சுவடிகளை அரும் பாடுபட்டச்சிட்டுத் தமிழுக்கு ஒப்புயர்வற்ற தொண் டாற்றினார். அவர் 'மகா மகோபாத்தியாயர்', 'தாட்சி ணாத்திய கலாநிதி’“டாக்டர்' என்னும் பட்டங்களைப் பெற்றார்.

(7) திருவள்ளுவர் ஒரு தெய்வப் புலவர். அவர் காலம் கிறித்துவுக்கு முற்பட்டது.

(8) இற்றை மதுரைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவினவர் பாண்டித் துரைத் தேவர். அவர் பாலைவனத்தம் வேள் (சமீந்தார்).

பயிற்சி 6

ஒரு வாக்கியத்தை அல்லது அதன் பகுதியை அடைமொழி யாகச் சுருக்கும் வகையால், கீழ்வரும் தனிவாக்கிய இணைகளை அல்லது தொகுதிகளை, ஒவ்வொரு தனிவாக்கியமாகச் சேர்த்தெழுதுக : (1) நாயனாப் பிள்ளை காஞ்சிபுரத்தார். அவருடைய தலைமை மாணவர் சுப்பிரமணியப் பிள்ளை. அவர் சித்தூரார்.

(2)

சுந்தரம்பிள்ளை நன்றாய்ப் பாடுவார். அவர் பைரவி பாடுவதிற் சிறந்தவர்.

(3) கோவிந்தன் கோடையிடிபோல் தபேலா அடிப்பான். அவன் உறையூரான்.

(4) வீராசாமிச் செட்டியார் ஒரு சிறந்த புலவர். அவர் எண் கவனம் (அஷ்டாவதானம்) பயின்றவர்.

(5) குப்புசாமிப் புலவர் சென்னைக் சென்னைக்

குசப்பேட்டையில்

வாழ்ந்தவர். அவர் திருக்குறள் அறிவைப் பரப்பினார்.

(6) அப்பாத்துரை ஆச்சாரியார் தேவாரம் பாடுவதிற் பெயர் பெற்றவர். அவர் மகனார் சம்பந்தமூர்த்தி ஆச்சாரியார். (7) உதியஞ்சேரலாதன் பாரதப் போர்ப்படைகட்குப் பெருஞ் சோறு வழங்கினான். அவனை முடிநாகராயர் பாடினார்.

(8)

பரணர்

என்று பலர் இருந்தனர். அவருள் ஒருவர் நெடுங்கழுத்தை யுடையவரா யிருந்தார். அவர் புறநானூற் றைப் பாடிய புலவருள் ஒருவர்.

பயிற்சி 7

ஒன்றுக்கு மேற்பட்ட வினைமுற்றுகளை விலக்கும் வகை யால், கீழ்வரும் தனிவாக்கிய இணைகளை ஒவ்வொரு தனி வாக்கியமாகச் சேர்த்தெழுதுக: