பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

(6) வேலை மிகுதி. வேலையாள்கள் சிலர்.

(7) அவன் பெரிய குற்றவாளிதான். அவனை

தண்டிக்கிறது?

173

அவனை இப்படியா

(8) அவன் மற்றோர்க்கு அரசன். அவன் பெற்றோர்க்குப் பிள்ளை.

(9) பனைவித்துப் பெரியது. அதன் மரம் ஒருவர்க்குக்கூட நிழல் தராது. ஆலவித்துச் சிறியது. அதன் மரம் ஆயிரக் கணக்கானவர்க்கு நிழல்தரும்.

(10) பண்டைத்தமிழ்ப் புலவரும் வறியவர்தான். அவர் ஒழுக்கம் தவறியதில்லை.

(11) மேல்நாட்டார் நாளும் வேளையும் பார்ப்பதில்லை. அவர் நீண்டநாள் வாழ்கின்றனர்.

(12) இந்தியர் மேனாட்டாருடன் இருநூற்றாண்டுகளாகப் பழகியுள்ளனர். மேனாட்டாருடைய ஒழுங்குமுறைகளை இந்தியர் கற்கவில்லை.

பயிற்சி 3

கீழ்வரும் தனிவாக்கிய ணைகளை அல்லது தொகுதிகளை, மறுநிலையிணைப்புச் சொல்லால் ஒவ்வொரு கூட்டு வாக்கியமாகச் சேர்த்தெழுதுக:

(1)

ஒருவனுக்குத் தன்மதி இருக்கவேண்டும். அவனுக்குச் சொன்மதி இருக்கவேண்டும். அவனுக்கு வ் விரண்டி லொன்று இருக்கவேண்டும்.

(2) சென்னைக்குப் பழமலை (விருத்தாசலம்) வழியாகச் செல்லலாம். அவ்விடத்திற்குச் சோலார்பேட்டை வழியாகச் செல்லலாம்.

(3) குருடனுக்கு வெளிச்சமிருக்கலாம். அவனுக்கு இருட்டு இருக்கலாம்.

(4) மக்கட்குச் செல்வமிருக்கவேண்டும். அவர்கட்குக் கல்வி இருக்கவேண்டும். அவர்கட்கு இவ் விரண்டிலொன்று இருக்கவேண்டும்.

66

(5) 'நாடு கேள். ஐந்து நகரம் கேள். ஐந்து இல்லம் கேள். போர் கேள். வரிசையாய் இவற்றுள் ஒன்று கேள்.”

(6) நான் பள்ளிக்கூடத்திற்குச் செல்ல வேண்டும். ஆசிரியர் அடிப்பார்.