பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




188

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

(3)

நல்ல பாம்பிலும் நச்சுத்தன்மையானவர் ஒவ்வொரு நாட்டிலுமுண்டு.

(4) புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது.

(5)

நல்லாரைக் காண்பதுவும் நன்று.

(6)

அரங்கன் அமெரிக்காவிற் படிக்க விரும்புகின்றான்.

(7) பெருஞ்சொல் விளக்கனார் சரவண முதலியார் நகைப்புக் கதை பல சொல்வார்.

(8)

ஈகையாளனுக்கே இருகையும் பயன்படும்.

சொற்பரிமாற்றம்

(Different Ways of Expressing the Same Idea)

(1) எல்லாம்

i. நீ யெல்லாம் ஒரு பெரிய மனிதனா? நீ கூட ஒரு பெரிய மனிதனா?

நீயும் ஒரு பெரிய மனிதனா?

ii. நாங்களெல்லாம்

இப்படிக் கஞ்சத்தனம்

பண்ண

மாட்டோம்.

நாங்களென்றால் (நாங்களெனின்) இப்படிக் கஞ்சத்தனம் பண்ணமாட்டோம்.

நாங்களானால்

இப்படிக் கஞ்சத்தனம் பண்ண

மாட்டோம்.

நாங்களோ இப்படிக் கஞ்சத்தனம் பண்ணமாட்டோம். நாங்களோவெனின் இப்படிக் கஞ்சத்தனம் பண்ண மாட்டோம்.

நாங்கள் இப்படிக் கஞ்சத்தனம் பண்ணமாட்டோம். iii. ஐந்துமணிக்கெல்லாம் விளக்கேற்றிவிட்டார்கள். ஐந்துமணிக்கே விளக்கேற்றிவிட்டார்கள்.

(2) சும்மா

i. சும்மாவிருந்து நேரத்தைப் போக்குகின்றான். சோம்பியிருந்து நேரத்தைப் போக்குகின்றான்.

ii. ஈராண்டுகளாய்ச் சும்மாவிருக்கிறார். ஈராண்டுகளாய் வேலை செய்யாமல் விட்டோய்ந்து, வேலையின்றி) இருக்கிறார்.

(வேலை