பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




208

(10) நான் என்ன செய்யட்டும்!

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

(11) நான்மட்டும் அந்தச் சமையத்தில் அங்கிருந்திருக்க வேண்டும்!

(12) என் தந்தையார் உயிரோடில்லையே!

பயிற்சி 2

கீழ்வரும் சாற்று வாக்கியங்களை உணர்ச்சி வாக்கியங் களாக

மாற்றுக:

(1)

(2)

(3)

(4)

(5)

(6)

சப்பானிய வானூர்தி குண்டுபோட்ட அன்று, சென்னை நிலை மிக அஞ்சத்தக்கதாயிருந்தது.

நகரங்களிலும் சில தெருக்கள் மிக அருவருப்பாயுள்ளன.

(

தாழு (குஷ்ட) நோயரையும் தொத்துநோயரையும் தெருக்களுக்கு வரவிடுவது மிகக் கேடானது.

கணவனையிழந்த கைம்பெண்கள் கைக்குழந்தையை ஏந்திக்கொண்டு கண்டவிடமெல்லாம் இரந்து திரிவது, மிகத் துன்பமான காட்சி.

நான் என் சொந்தவூர் போய்ச் சேர்ந்தால் நன்றாயிருக்கும். கற்றவரும் பெருஞ் சம்பளக்காரருமான அதிகாரிகள் கையூட்டு (லஞ்சம்) வாங்குவது மிக இழிவானது.

(7) தந்தையிறந்த பின்பும்

(8)

வருந்தத்தக்கது.

கந்தன்

கவலையற்றிருப்பது

ச் செய்தி நம்ப முடியாததாயிருக்கின்றது.

17. வாக்கிய வடிவு மாற்றம் (தொடர்ச்சி)

தனி வாக்கியத்தை கூட்டு வாக்கியமாக மாற்றல் (Conversion of Simple Sentences to Complex Sentences)

கீழ்வரும் வாக்கிய இணைகளை ஆய்க :

தனிவாக்கியம் : கேடிலியப்பர் சிவபெருமானை நோக் கித் தவங்கிடந்து தாயுமானவரைப் பெற்றார்.

கூட்டுவாக்கியம் : கேடிலியப்பர் சிவபெருமானை நோக் கித் தவங்கிடந்தார்; அதன் பயனாய்த் தாயுமானவரைப் பெற்றார்.

தனிவாக்கியம்

பாணபத்திரர் பரிசுபெறும் பொருட்டுச் சேரமான் பெருமாள் நாயனாரிடம் சென்றார்.