பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




214

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

தனிவாக்கியத்தைக் கலப்பு வாக்கியமாக மாற்றல்

ஒரு சொல்லையாவது தொடர்மொழியையாவது கிள வியமாக விரிப்பதனாலும், வாக்கிய அமைப்பை மாற்றுவதனாலும், ஒரு தனிவாக்கியத்தைக் கலப்பு வாக்கியமாக மாற்றலாம்.

கீழ்வரும் வாக்கிய இணைகளை ஆய்க :

தனிவாக்கியம்

அமைச்சரது வரவு எனக்குத் தெரியாது.

கலப்புவாக்கியம் : அமைச்சர் வருவார் என்பது எனக்குத்

தனிவாக்கியம்

தெரியாது.

அனைவரும் ஆங்கிலேயர் ஒழுங்கை ஒத்துக்கொள்வர்.

கலப்புவாக்கியம் : அனைவரும் ஆங்கிலேயர் ஒழுங் குள்ளவர் என்பதை ஒத்துக்கொள்வர்.

தனிவாக்கியம் :

ஒருகடவுட் கொள்கை இன்னும் உலகில் சரியாய்ப் பரவவில்லை.

கலப்புவாக்கியம்: கடவுள் ஒருவரே என்னும் கொள்கை

இன்னும் உலகில் சரியாய்ப் பரவவில்லை.

தனிவாக்கியம் : இன்றைக்கு

பார்த்தேன்.

நான்

மழையை

எதிர்

கலப்புவாக்கியம் : இன்றைக்கு நான் மழை வருமென்று

எதிர்பார்த்தேன்.

தனிவாக்கியம் : அவர் தன்மையை ஒருவரும் அறியார்.

கலப்புவாக்கியம் : அவர் இன்ன தன்மையரென்று ஒருவரும் அறியார்.

பயிற்சி

கீழ்வரும் தனிவாக்கியங்களைப் பெயர்க்கிளவியக் கலப்பு

வாக்கியமாக மாற்றுக:

(1) ஒருவன் அயலார் உதவியை எதிர்பார்க்கக்கூடாது.

(2) நடந்ததைச் சொல்.

(3) மதுவிலக்குச் சட்டம் இன்று ஆட்சியி லிருக்கின்றது.

(4) நான் கணக்கைக் கடினமெனக் கருதவில்லை.