பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

viii. பழமொழி.

‘உதிரம் உறவறியும்.’

255

குறிப்பு : பொதுவாக, மேற்கோட் குறிபெற்ற பகுதியினிறுதியிற் புணர்ச்சியிருத்தல் கூடாது. புணர்ச்சி இன்றியமையாத விடத்தில், மேற்கோட்குறியை இயன்றவரை மேற்கோளிறுதி யொட்டிக் குறித்தல்வேண்டும்.

எ-டு : 'தமிழ்ப் பொழிலு'க்குக் கட்டுரை வழங்குபவர்க்கு, பக்கத் திற்கு

அரை யுருபா வீதம் நன்கொடை அளிக்கப்பெறும்.

9. பிறைக்கோடு (Brackets)

பிறைக்கோடு, ஒற்றைப் பிறைக்கோடு (Single Bracket) இரட்டைப் பிறைக்கோடு (Double Brackets) பகர அடைப்பு (Large Bracket) என மூவகைப்படும்.

ஒற்றைப் பிறைக்கோடு வருமிடங்கள் :

i. மொழிபெயர்ப்பு.

எ-டு: தொலைக்காட்சி

(Television) அண்மையிற் 5600T

பிடிக்கப்பட்ட புதுப்புனைவுகளுள் ஒன்று.

11. பொருள்கூறல்.

எ-டு : பிறரை ரமிக்க (மகிழ)ச் செய்பவன் ராமன் என்பர்.

iii. பொருள் விளக்கம்.

எ-டு : நிலைமொழி (அதாவது முதலில் நிற்கின்ற மொழி).

iv. சிறுபிரிவெண்.

எ-டு : (1), (2); (i), (ii)

V. பாடவேறுபாடு.

எ-டு : கண்டது கற்கப் பண்டிதனாவான் (பண்டிதனாகான்).

vi. உரையிற் சொல் வருவித்தல்.

எ-டு : மலரடி = (தாமரை) மலர்போன்ற பாதம்.

இரட்டைப் பிறைக்கோடு வருமிடம்

i.பலவரிப் பொதுமை.

எ-டு : சாத்தனது கருமை சாத்தானது வரவு

} - பண்புத் தற்கிழமை.