பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

(8)

(9)

காட்டுவழியாகச் செல்லும் பாதை பாதுகாப்பற்றது.

ஈயம் மிக எடையுள்ள உலோகம்.

27

(10)மூவேந்தர் சின்னங்களும் ஒருங்கே கொண்டது தமிழ் நாட்டுக் கொடி.

(11) இளம்பருவக் காளைக்குக் காளங்கன்று என்று பெயர்.

(12) ஒன்றும் எழுதப்படாத தாள் வெற்றுத்தாள். (13) மேடுபள்ள மில்லாதவெளி சமவெளி.

பயிற்சி (2)

கீழ்வரும் வாக்கியங்களிலுள்ள பெயரெச்சங்கட்குப் பதிலாகப் பெயரெச்சத் தொடர்மொழிகளை அமைக்க :

(1) இல்வாழ்க்கையே நல்வாழ்க்கை

(2) வீண்பேச்சுப் பேசுகிறவன் வேலையைத் திறம்படச் செய்யமாட்டான்.

(3)

விடுதி மாணவர்க்கில்லாத சில வசதிகள் வீட்டு மாணவர்க் குண்டு.

(4) புன்குடிலாயினும் தன்குடிலா யிருத்தல் வேண்டும்.

(5) சீமைச் சரக்கோ சீர்மைச் சரக்கோ!

(6) பஞ்சுத் துணியினும் பட்டுத்துணி விலை மிகுதி.

(7)

மண்கலத்திற் சமைத்துண்பது உடல்நலத்திற் கேது வானது.

(8) இந்தியக் கொடி மூவரண முள்ளது.

(9)

வெட்டிவேலை செய்கிறவன் வீணன்.

(10) தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்.

(11)

கெட்ட பழக்கங்களை விட்டுவிடல் வேண்டும்.

பயிற்சி (3)

பின்வரும் வாக்கியங்களிலுள்ள

பெயரெச்சத்தொடர்

மொழிகட்குப் பதிலாகப் பெயரெச்சங்களை அமைக்க :

(1) ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட காரியங்களைக் கவனிக்கலாகாது.