பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




28

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

(2) நீர்வற்றிய கிணறுகளே பாலைநிலத்தில் உண்டு.

(3)

உள்ளீடற்ற கடிதம் ஒன்று இன்று எனக்கு வந்தது.

(4) நான் சென்னைக்குச் சென்று நீண்ட அளவான காலம்

(5)

ஆகிவிட்டது.

பொய்யில்லாத பொதுமறை திருக்குறள்.

(6) கண்ணாற் கண்ட செய்தியும் சிலவேளை பொய்யாகும்.

(7) அளவுக்கு மிஞ்சிப் பழுத்துக்கெட்ட பழங்கள்

மாய்க் கிடைத்தாலும் உண்ணக்கூடாது.

(8) இழை நெருக்கமில்லாத துணி விரைந்து கிழியும்.

(9)

பசுமையில்லாத ஓலை சலசலக்கும்.

(10)வளமில்லாத நிலம் பாலை.

லவச

(11)

கருநிற விலங்குகளுட் பெரியது யானை.

(12)

வெளிச்சமில்லாத வீட்டில் குடியிருப்பவரை வேதாளம் போன்ற நோய் அலைக்கழிக்கும்.

வினையெச்சத் தொடர்மொழி (Adverb Phrase)

வினையெச்சம்போல் வினையையும் வினையடி

வினையடிச்சொல்

லையும் தழுவும் தொடர்மொழி, வினையெச்சத் தொடர் மொழியாம்.

வினைமுற்று, பெயரெச்சம், வினையெச்சம் ஆகிய மூன்றும் வினைச்சொல் என்றும், தொழிற்பெயர் வினையாலணையும் பெயர் ஆகிய இரண்டும் வினையடிச்சொல் என்றும், அறிக.

பின்வரும் வாக்கிய இணைகளை ஆய்க :

(1) இக் கட்டுரை நன்றாய் இருக்கிறது :

இக் கட்டுரை நல்ல முறையில் இருக்கிறது.

(2) அவர் கோபமாய் இருகிறார்.

அவர் கோபமான நிலையில் இருக்கிறார்.

(3) அன்று புகைவண்டி யில்லை.

அக்காலத்தில் புகைவண்டி யில்லை.

(4) புத்தகம் கீழே யிருக்கிறது.

புத்தகம் தரையின்மேல் இருக்கிறது.