பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




32

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

பயிற்சி (4)

வாக்கியங்களிலுள்ள

பின்வரும்

தொடர்மொழிகளை

ன்னின்ன தொடர்மொழி என்று குறிப்பிட்டு, அதற்குக் காரணமுங் காட்டுக.

(1) ஒருகாலத்தில், காவிரிப்பூம்பட்டினத்தில், கரும்பு தின்னக் கைக்கூலி கொடுக்கும் ஒரு வேளாளன் இருந்தான்.

(2)

(3)

(4)

(5)

(6)

கூரத்தாழ்வான் காலம் ஏறத்தாழ எண்ணூறாண்டுகட்கு முற்பட்டதாகும்.

வீரசோழியம் வடமொழி வழக்கைத் தழுவிய தமிழ் இலக்கணம்.

கங்கர் குலத்திற் பிறந்தவனும் பவணந்தி முனிவரைப் போற்றியவனுமான அமராபரண சீயகங்கன், மூன்றாம் குலோத்துங்கச்சோழனுக் கடங்கிய சிற்றரசன்.

தால்காப்பியம், எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் பொருளதிகாரம் என மூன்றதிகாரங்களை யுடையது.

கல்வெட்டாராய்ச்சி பழம்பொருட் கலையில் ஒரு பிரிவாகும்.

(7) பிழையின்றிப் பேசும் முறையை ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ளவேண்டும்.

(8) பழந்தமிழ் நூல்கள் பலவற்றைப் பதினெட்டாம் பெருக்கிற் கிரையாவதினின்று மீட்டுக் கொடுத்தவர், காலஞ் சென்ற மகாமகோபாத்தியாய தாட்சிணாத்திய கலாநிதி டாக்டர் உ. வே.சாமிநாதையர்.

(9) எதையும் ஐயந்திரிபற அறிவதே மெய்யறிவாம்.

(10)

(11)

(12)

(13)

(14)

தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட சோழருள் ஒருவன். சிவபெருமானின் தலைமை யுணர்த்தும் திருவண்ணாமலை.

கல்வி யறிவொழுக்கங்களிற் சிறந்தவர் கற்றோர்.

டம்

மணமக்களை ஆயிரங்காலத்துப் பயிர் என்பது வழக்கு.

காலஞ்சென்ற செண்டத்தூர் ஐயாத்துரை முதலியார், மக்களார் மறக்கப்பட்ட வள்ளல்களுள் ஒருவர்.