பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

41

(4) கடவுளில்லை யென்று ஒருவன் சொன்னால், அவனைக் கண்டிக்கவாவது தண்டிக்கவாவது யாருக்கும் அதிகார

மில்லை.

(5) அவர் அடித்தாரென்று அவர் மகனே சொல்லும்போது, வேறென்ன சான்று வேண்டியிருக்கின்றது?

(6)

மூன்று மந்திரிமார் ஆளுக்கு ஐந்நூறு கசம் துணி திருட்டுத் தனமாய் வாங்கினரென்று நீ கூறியதை மெய்ப்பிக்க வேண்டும்.

(7) இந்தக் கிணற்றுக்குள் விழு என்று ஒருவன் சொன்னால், விழுந்துவிடுவையா?

(8) பண்டைத் தமிழரசர் விழாக்காலங்களில் சமய குரவரை நோக்கிப் பட்டிமண்டபம் ஏறுமின் என்று கூறியது, அவரைக்கொண்டு உண்மையறிதற்கே.

(9) ஞாலம் கதிரவனிடத்திலிருந்து விழுந்த துண்டென்று வானநூலார் கூறுவது, உத்திக்குப் பொருந்தவில்லை.

(10) ஆங்கிலேயர் ஆட்சிமுறை சிறந்ததென்று பகைவரும் கூறும்போது, அதை நம்பாமலிருக்க முடியுமா?

கேள்விப்

(11) இலண்டன் மாநகரக் காவற்சேவகர் இவ் வுலகத்திலேயே தலைசிறந்தவர் என்று பலர் சொல்லக் பட்டிருக்கின்றோம்.

(12) வாய்மை யென்பது தீது சொல்லாமை என்று வள்ளுவர் கூறியது, என்றும் வாய்மைக் கிலக்கணமாகும்.

(13) கேழ்வரகில் நெய் ஒழுகுகிறது என்று ஒருவன் சொன்னால், கேட்பார்க்கு மதி எங்கே போயிற்று?

(14) நஞ்சும் மருந்தாம் என்று மருத்துவர் கூறுவது உண்மையே. (15) அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாம் என்று நான் அடிக்கடி சொல்லியும், அவன் இன்னும் உண்டி சுருக்க வில்லை.

(16)பிறப்பால் சிறப்பில்லை என்று ஒருவர் சொன்னமட்டில், அவரைத் திராவிடர் கழகத்தாரென்று நினைத்துக் கொள்கின்றனர்.

(17) குடி கெட்டதென்று குடிகாரன் சொல்வதில் ஏதேனும் பொருளுண்டா?