பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

43

(6) ஓர் அழகான மயில் மேலைமலைச் சோலையில் தோகை விரித்தாடுகிறது.

(7) ஓர் அழகான மயில் மேலைமலைச் சோலையில் நாள் தொறும் தோகை விரித்தாடுகிறது.

(8) ஓர் அழகான மயில் மேலைமலைப் பூஞ்சோலையில் நாள்தொறும் தோகை விரித்தாடுகிறது.

(9) ஓர் அழகான மயில் மேலைமலைப் பூஞ்சோலையில் நாள்தொறும் காலை மாலை தோகை விரித்தாடுகிறது. (10) ஓர் அழகான ஆண்மயில் மேலைமலைப் பூஞ்சோலையில் நாள்தொறும் காலை மாலை தோகை விரித்தாடுகிறது. (11) ஒரு மிக அழகான ஆண்மயில் மேலைமலைப் பூஞ்சோலை யில் நாள்தொறும் காலை மாலை தோகை விரித்தாடுகிறது. (12) ஒரு மிக அழகான ஆண்மயில் மேலைமலைப் பூஞ்சோலை யில் நாள்தொறும் காலை மாலை களிப்புடன் தோகை விரித்தாடுகிறது.

வை பன்னிரண்டும் தனி வாக்கியங்கள். இவை யாவும் ஒரே கருத்தின் சுருக்கமும் விரிவுமாகும். முதல் வாக்கியத்தில் இரு சொற்களாய்ச் சுருங்கிய கருத்து, இறுதி வாக்கியத்தில் பதினாறு சொற்களாக விரிகின்றது. இன்னும் விரிக்கலாம். ஆனால், இதற்குமேல் விரிக்க விரிக்க, வாக்கியத்தின் இயற்கைத் தன்மையும் அழகும் கெடும். சொற்கள் மேலும் மேலும் கூடிக்கொண்டே போனாலும், முதல் வாக்கியத்திலுள்ள வாக்கிய வுறுப்புகளே (ஓர் எழுவாயும் ஒரு முற்றுப் பயனிலையும், இறுதிவரை தொடர்கின்றன. வாக்கிய வுறுப்புகளைப் பொறுத்த வரையில், முதல் வாக்கியமும் இறுதி வாக்கியமும் ஒன்றே. ஆகையால், அப் பன்னிரு வாக்கியங் களும் தனி வாக்கியமாகும்.

குறிப்பு : ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் முற்றுப் புள்ளியிருத்தல் வேண்டும். முற்றுப்புள்ளியே வாக்கிய முடிவிற் கடையாளம்.

கூட்டு வாக்கியம் (Compound Sentence)

ஓர் எழுவாயும் பல முற்றுப் பயனிலைகளுங்கொண்ட வாக்கியமும், பல எழுவாயும் பல முற்றுப் பயனிலையும் கொண்ட வாக்கியமும் கூட்டுவாக்கியமாகும்.

எ-டு: (1) மாணவரே! நீங்கள் உங்கள் பாடத்தை நன்றாய்ப் படிக்கவேண்டும்; தேர்வில் சிறப்பாகத் தேற வேண்டும்.

(2) திருவாளர் கா. சுப்பிரமணியப் பிள்ளை இளமை யிலேயே ஆங்கிலம் தமிழ் சமற்கிருதம் மூன்றையுங்